கோடைகாலத்தின் வருகை மற்றும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு ஊழியர்கள் இலகுவான உடைகளை அணிந்து பணிக்கு வர டோக்கியோ ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The Formula
வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஈழத்தின் மூத்த போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.