2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் வணிக நிர்வாக முதுமானி (MBA) கற்கையைத் தொடரும் மாணவர்கள் குழு, வதிவிடப் பயிற்சிப் பட்டறை மற்றும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
பிஃபா 2026 உலகக்கோப்பைத் தொடரின் எட்டாம் நாள் (ஜூன் 18), கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக, தொடரை நடத்தும் நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ அணிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையே கைச்சாத்தாகி, உடனடிப் போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் பெரிதும் வரவேற்கிறது.
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி. எனது அரசியல் ஆசான் தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. ஆழ்ந்த வாசிப்பாளர், கொள்கைப் பற்றாளர் , தத்துவ நோக்கில் தடம் பிறழாமல் பயணித்தவர் என்ற பார்வையில் அவரை தரிசித்த எனது கண்களை நானே இன்று நொந்துக் கொண்டேன்.