‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’

(என்.கே. அஷோக்பரன்)

மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.

பொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தருமாறு பொதுமக்களிடம் கோருவதானது, வெற்றுக் காசோலையொன்றைக் கேட்பதற்குச் சமமாகும். ஏனெனில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து, என்ன செய்யப் போகிறார்கள் என்பதை, அவர்கள் நாட்டு மக்களுக்கு இன்னமும் கூறவில்லை.

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?

(கே. சஞ்சயன்)

வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யாருக்கு அருகதை உண்டு தமிழர் தரப்பில்…?

(சாகரன்)
2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவைத் தொடர்ந்த யுத்தமற்ற சூழலுக்கு பின்ரான அரசியலைப் பேசவிளையும் பதிவு இது. தாம் சொல்லும் அரசியலை பாராளுமன்றத்தில் கிளிப்பிள்ளைப் போல் சொல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) உண்மையான பன்முகத் தன்மை கொண்ட பல கட்சிகளின் ஐக்கியப்பட்ட அமைப்பா…? என்றால் இல்லை என்ற பதிலை நாம் யாரும் மறுக்க மாட்டோம்.

விக்கியின் வியாக்கியானங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “…சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன…” என்று, தெரிவித்திருக்கிறார்.

‘சமூக சேவகியான எனக்கு மக்களின் மனங்களில் தனி இடம் உண்டு’

எனக்குப் போட்டியாக, எனது தம்பி வாக்குக் கேட்டாலோ அல்லது வேறு ஒருவர் வாக்குக் கேட்டாலோ, எனது இடம் மக்கள் மத்தியில் நிச்சயம் இருக்குமென, ஐக்கிய தேசிய கட்சியின் ‘யானை’ சின்னத்தில், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக, 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ரோஹினா மகரூப் தெரிவித்தார்.

அபிவிருத்தியை அரசியலும் அரசியலை உரிமையும் நகர்த்த வேண்டும்’

(அதிரதன்)

தமிழர் விடுதலைக் கூட்டணி, மாற்று அரசியலை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தகுந்தவர்களை, தகுதியுள்ளவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. எந்த அணியுடனும் போட்டியிடும் வல்லமை, எமது அணிக்கு இருக்கின்றது. நிச்சயமாக, ஓர் ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்றும் என, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

தளம் – 04 – ஈழத் தமிழ் அரசியல் நேற்று, இன்று, நாளை

(தமிழ் விவாதிகள் கழகம்)

ஈழத்தமிழ் அரசியலை நோக்குகின்ற போது மூன்று போக்குகளை அவதானிக்கலாம்.

முதலாவது கோட்பாட்டு ரீதியான சிந்தனைப்போக்கு, இது தமிழரின் விடுதலை அடைவது பற்றிய கோட்பாட்டுருவாக்கம், தமிழ்த்தேசியம்,சுயநிர்ணயம், தனிநாடு போன்றவற்றை உள்ளடக்கியது. இரண்டாவது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுசார் சிந்தனைப்போக்கு, இது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான செயன்முறை சார்ந்தது.

கிழக்கே ஓர் அஸ்தமனம்

1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது.