(Thesam Net)
சுயபுத்தி இருந்தாலுமே மற்றவர்களை கூடி ஆலோசிக்க வேண்டும்! சுயபுத்தியும் இல்லாமல் மற்றையோர் புத்தியையும் கேளாமல் அரசியல் செய்தால் இதுதான் முடிவு!
Category: இலங்கைத் தமிழர் போராட்டம்
Sri Lankan Tamil Freedom Struggle
சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்
அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.
(“சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)
உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?
(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.அவர் அளித்த கருத்தை இப்போ பார்ப்போம் …..!)
உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?
தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். இருந்தாலும் இறுதியாக உறுதியாக சொல்கின்றேன் ,.. நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன தாரக மந்திரம் .தலைவர் இருக்கிறார் என்று விடுபவர்களே சிந்தியுங்கள் …
திலீபன்
இலங்கையில் திலீபன் ஒரு வரலாற்றுப் பதிவுக்கு உரிய பெயர் என்பது மறுக்க முடியாதது.ஆனால் அவர் வாழ்வும் மரணமும். விமர்சனத்துக்கு உரியது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு மக்கள் மனதில் பாரிய மாறுதல்களும் சந்தோசங்களும் மீள திரும்பின.ஊரெங்கும் பறந்த புலிக்காடிகள் காணாமல் போயின.
காணாமல் போனாரா பிரபாகரன்?
தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.
பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து
மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை
(கருணாகரன்)
வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன.
(“கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)
புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்துக்கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அதனை தனது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்- அவர் அதனை உடனடியாக இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிற்கு தெரிவித்தார்.
(“புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்
தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திலிருந்து வெளியில் வந்த பின்னர் புற்றுநோய் ஏற்படவில்ைலயெனவும் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்க்குள்ளானதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.
(“தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்” தொடர்ந்து வாசிக்க…)
பயிரை மேய்ந்த வேலிகள்..(6)
(பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)
மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.