ஞானசார தேரர் விடுதலை

பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவதூறு வழக்கில் குற்றவாளியான அவர் 9 மாதங்களும் 3 வாரங்களும் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தமை குறிப்பிடதக்கதாகும் அத்தோடு ஞானசார தேரரின் தயாரும் சிறைச்சாலை வாசளில் அவருக்காக காத்திருந்தார்.

ரிஷாட், ஹிஸ்புல்லா, அசாத் சாலியை பதவி விலகக்கோரி வலியுறுத்தல்

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக் கூறப்படும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகிகோரை உடனடியாக பதவி விலக்குமாறு கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிக்குகள் இணைந்து கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றை நேற்று (22) கையளித்துள்ளனர்.

இந்திய தேர்தல் முடிவுகள்


தமிழ் நாட்டில் திமுக முன்னிலை வகிக்கின்றது. அதிமுகவிற்கு பாரிய பின்னடைவு. கூடவே பாஜக விற்கும் பாரிய பின்னடைவு. மத்தியில் பாஜக தனது இடத்தை தக்கவைக்கின்றது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு முன்னேற முடியவில்லை. மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் வாய்பையும் காங்கிரஸ் பெறுவது கஷ்டம். மாநிலங்கள் அவையில் திமுக ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு வீச்சாக வெற்றி பெறுவதாக அறிய முடியவில்லை. இன்னமும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் ஆரம்ப நிலை முடிவுகள் இவை

மினுவாங்கொடையில் புர்கா, நிக்காப் அணிய தடை

மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியபோதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, மினுவாங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய வேண்டாமென, நகர சபையினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘முஸ்லிம்களின் பிரதேசங்களை சோதனையிடுக’

முஸ்லிகள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இதனால், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டது.

ஷங்கிரி-லா தாக்குதலில் சஹ்ரான் பலி; DNAஇல் உறுதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

ரிஷாட் விவகாரம்; சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 89 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 69 பேர் குற்ற விசாரணைப் பிரிவாலும் 20 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றுவந்த வர்த்தக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து அரிசி மற்றும் ஆடை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், வணிக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பபாலி தெரிவித்துள்ளார்.

யாழில் இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் இந்தியர்கள் இருவரை, விசேட அதிரடிப் படையினர், இன்றுக் காலை (17) கைதுசெய்துள்ளனர். இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சுற்றுலா விசாவில் வருகை தந்து, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலை செய்யும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.