கரோனா வைரஸ்; இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட முடியாத தன்மைக்கு நம்முடைய தேசம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீள் அறிவித்தல் வரும் வரை சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு

புத்தளம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 4.30 மணிமுதல் மீண்டும் அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

யாழ் றியோ ஐஸ்கிறீம் கடையில் கொரோனா!! சுட்டிக்காட்ட முற்பட்ட வைத்தியர் மீது றியோ ஊழியர்கள் தாக்குதல்!!

கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட
வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டார்
-அவரது நண்பர் மீதும் தாக்குதல், இருவர் கைது-

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கனடிய பிரதமரின் இன்றைய அறிவித்தல்

1. புதன் நள்ளிரவு 12 மணியிலிருந்து விமானப் பணியாளர்கள், பிற நாட்டு தூதர்கள், அமெரிக்க குடிமக்கள், கனடாவில் தங்கள் குடும்பத்தைக் கொண்டவர்கள் தவிர்ந்த கனடிய குடியுரிமை அல்லது வதிவிட உரிமை அற்றவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

’பொதுத் தேர்தல் இப்போதைக்கு வேண்டாம்’

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன அச்சம் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கோரிக்கை விடுத்தார்.

தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அவசர நிலை – இனி என்னவெல்லாம் நிகழலாம்?

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 5,000க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 132,500 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸ் தொற்றால் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 43 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று உள்ளவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றுக்குள்ளாகி அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெறும் நபருடன் வசித்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.