சிதம்பரத்துக்குத் தடுப்புக் காவல்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மோசடி, பணச் சலவையில் பங்கெடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை, தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு, சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கோட்டைக்கு செல்ல படகு சேவை

கொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (22) முதல் மூன்று படகுகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்! ஜேர்மனியிலிருந்து TELO உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். 34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

’இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்படுகின்றன’

இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘வட, கிழக்கு ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபயவே சூத்திரதாரி’

வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் காரணமாக அமைந்தவர் கோட்டாபய ராஜபக்‌ஷ என்பதே உண்மையென, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்தார். இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் – அனுரகுமார

ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

சே குவேராவின் மகள் இந்தியாவில்

உலக புரட்சியாளர்கள் பட்டியலிலும், கியூபா புரட்சியிலும் முக்கியமானவரான சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா இந்தியா வந்துள்ளார். கியூபா நாட்டிலிருந்து டெல்லி வந்தடைந்த அவர், நேற்று முன்தினம் கேரளா வந்தார். அத்துடன், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார்.

மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதான பாசிசக் கொடுந்தாக்குதலை முறியடிக்க…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி—மாலெ (லிபரேஷன்), தனது 50வது ஆண்டு நிறைவையும், கட்சியின் நிறுவனரான சாரு மஜூம்தார் பிறந்த நூற்றாண்டையும் அண்மையில் அனுஷ்டித்தது. இது தொடர்பாக, ஒரு பெரும் சிறப்பு மாநாட்டை நேதாஜி உள் விளையாட்டரங்கில் கடந்த ஜூலை 30 ஆம் நாள் நடத்தியது. மவ்லாலி யுவ கேந்திரத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு நாட்கள், கட்சித் தொண்டர்களுக்கான பயிற்சி முகாமையும் நடத்தியது.

‘அமெரிக்க பிராஜாவுரிமை கோட்டா நீக்கிக்கொண்டார்’

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிராஜாவுரிமையை நீக்கிக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், அது தொடர்பான ஆவணங்கள் உரிய காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

குடிநீருக்காக அலையும் மக்களை கவனிப்பார் யாருமில்லை!!!

நாட்டின் கிழக்கு மற்றும் ஏனைய பல பிரதேசங்களில் நிலவுகின்ற வரட்சி காரணமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கிராம மக்கள் குடிநீர் இன்றி மிகவும் கஷ்ட நிலையில் வாழ்கின்றனர்.