‘கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை’

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்​கை எடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, குற்றம் சுமத்தியுள்ளார். பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடைபெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளதைபோல, கறுப்பு ஜூலை இடம்பெற்றும் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வாய்ப்பு, பிரியங்கா காந்திக்கு வழங்கப்படலாம் என, மத்திய முன்னாள் மந்திரி நட்வர் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல் காந்தி இராஜினாமா செய்தார்.

’ஒன்றிணைந்த எதிரணியில் ஐந்து வேட்பாளர்கள்’

ஒன்றிணைந்த எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறிய அவர், முன்மொழியப்பட்ட ஐவரில் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸார் சூடு: மானிப்பாயில் ஒருவர் பலி

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நியூசிலாந்தை வென்று முதன்முறையாக சம்பியனான கிரிக்கெட்டின் தாயகம்

தம்நாட்டில் இடம்பெற்றுவந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து சம்பியனானது. லோர்ட்ஸில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்றே, இதுவரை மூன்று தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வந்த இங்கிலாந்து, நான்காவது முறையாக இம்முறை சம்பியனானது.

ஜூலை 16 நூற்றாண்டு தின நிகழ்வின் நினைவூட்டல்

ஜூலை 16 நூற்றாண்டு தின நிகழ்வின் நினைவூட்டலாக ஏற்றுக் கொள்ளும்படி அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
++++++++++++++++++++++++++++++
மனிதன் முத்தையா, சங்கானை வாசி, அனைவராலும் Man முத்தையா என்று அழைக்கப்பட்டவர் எழுதிய கவிதை, “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்” 25வது ஆண்டு நினைவாக பிரசுரிக்கப்பட்டது.

அனைவரையும் காத்தவனே!

பாமரர் மேல் உன் அன்பினைச் சொரிந்தாய்
படித்தவர்க்கெல்லாம் அறிவினைப் பகிர்ந்தாய்
மாணவர் தமக்கு வழிகாட்டி அகமகிழ்ந்தாய்
மாமகனே காத்தி ஏழைப் பங்காளா!

தூயவனே! உன் துடிப்பான தத்துவத்தை 
வேடிக்கையாகப் பேசிப் புரிய வைத்தாய்
ஞாலமெங்கும் செம்பதாகை – பரப்பி
சிறகடிக்க சிந்தை கொண்டு நின்றாய்

காத்தார், காத்தார் என்றே மக்கள் உமக்கு
காத்திரமாய் ஈந்தனரே அப் பெயரை
அனைவரையும் காத்தவனே – காத்தி காத்தி
உனையன்றி யாவர்க்குப் பொருந்தும் இப்பெயர்?

குலம் அக்காவின் இறுதி நிகழ்வுகள்

எனது தாயாரின் இறுதிச் சடங்கு செவ்வாய் கிழமை (16-07-2019) அன்று காலை நடை பெறும். அன்று காலை 8.30க்கு 36 A கடற்கரை வீதி யாழ்ப்பாணம் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வும் அடுத்து காலை 10.00க்கு புனித மரியாள் (பெரிய) கோவிலில் இறை ஆசீர்வாத நிகழ்ச்சியும் பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் அடக்கமும் இடம்பெறும். இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6.35 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரரணை தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

தமிழர்களின் பிரச்சினை தீர வேண்டுமென்பதில் கூட்டமைப்புக்கு அக்கறையே இல்லை: முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கடும் சாடல்

தமிழ்மக்களின் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவொரு உண்மையான அக்கறையுமில்லை. தமிழர்களின் பிரச்சினை தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் காணப்பட வேண்டுமென்பதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் கடுமையாக சாடியுள்ளார்.

39 நாடுகளுக்கு விசேட விசா நடைமுறை

இலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.