புலிக்கொடி ஜெயானந்தமூர்த்தி சிங்கக் கொடியுடன்…??

2010ம் ஆண்டு இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் களமிறக்கப்பட்டு பிரதமர் பொறுப்புக்கு கனவு கண்ட திருவாளர் ஜெயானந்த மூர்த்தி அவர்கள், சிறிலங்காவில் தரையிறங்கியுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக சனநாயக அணியென்ற பெயரில் ஒன்றை உருவாக்கியிருந்தவர் என்பதோடு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரச்சார பீரங்கியாக செயற்பட்டவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு துரோகிப்பட்டம் கட்டி பரப்புரை செய்து தன்னை தேசியவாதியாக ஜெனீவா மேடையில் முழக்கமிட்டவர். புலிக்கொடியுடன் வெளிநாடுகளை வலம் வந்த ஜெயானந்தமூர்த்தி சிங்கக் கொடி பிடிக்கத் தயாராகி விட்டார் காத்திருங்கள் களத்திற்காக

மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்

“மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன்” கண்ணீருடன் தாய் சாட்சியம்

மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர். தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்களையும் புலிகளும் பிடித்துச் சென்றனர். இன்று மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன் என பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் ஜெயமேரி எனும் தாய் கண்ணீருடன் சாட்சியமளித்துள்ளார்.

(“மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 20)

பற்குணம் முதன்முதலாக அலுவலகத்துக்கு பொறுப்பேற்க வந்தபோது அங்கே நிறைய மக்கள் தங்கள் தேவைகளை முடிக்க வெளியே காத்திருந்தனர் .இதை அலுவலகத்துக்குள் நுழைய முன்னரே அவரின் கண்களில் பட்டது.அவர் பொறுப்பேற்ற மறுநாள் அவருடைய அறையின் வெளிக்கதவை திறந்துவிட்டு என்னைச் சந்திக்க வருபவர்கள் நேரடியாக வரலாம் என எழுதி வைத்தார்.அவர் பொறுப்பேற்ற சில வாரங்களில் அலுவலகத்தின் முன்பாக உள்ள மக்கள் தொகை குறைந்தது.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 20)” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரி- ரணில் ஆட்சியும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை

 

இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் மே தின அறிக்கை

இலங்கையின் அனைத்து தொழிலாளர்களும், விவசாயிகளும், அடக்கப்படும் தேசிய இனத்தவர்களும், சமூகத்தினரும், சமூகப் பிரிவினரும் இருந்த சில உரிமைகளையும் இழந்து தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் பல விதமான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவனவாக அறியப்படும் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் தம்மளவில் சீரழிந்தும் ஆளும் வர்க்கத்தினரின் நடவடிக்கைகளால் பலமிழந்தும் காணப்படுகின்றன. மறுபுறத்தில் இலங்கை முதலாளி வர்க்கத்தினர் வெளிநாட்டு, சர்வதேச முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சேவகம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர்.

(“மைத்திரி- ரணில் ஆட்சியும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை” தொடர்ந்து வாசிக்க…)

‘நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்| அவன் ஏன் ஒழிந்திருக்கவில்லை?’

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிபிள்ளையை ஒளிந்திருக்குமாறு நான் சொன்னேன் என்று கூறிய நீர்வேலி முகாமிலிருந்து நகுலனின் வீட்டுக்கு வந்து செல்லும் ரவி, அவன் ஏன் ஒழிந்து இருக்கவில்லை என்றும்; கேட்டுள்ளார். நகுலன், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியிலுள்ள அவரது தோட்டக் காணியில் வைத்து செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.

(“‘நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்| அவன் ஏன் ஒழிந்திருக்கவில்லை?’” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 19)

பற்குணம் அவர்கள் பயிற்சிகாலத்தில் வாழைச்சேனையில் பணியாற்றினார்.ஒரு இளைஞர் ஒருவர் அதுவும் தமிழர் புதிதாக நிர்வாக சேவையில் சேர்ந்து தன் தொகுதியில் பணியாற்றுவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை பற்குணத்தை தானாகவே நேரில் வந்து சந்தித்து வாழ்த்தினார்.இது பற்குணத்துக்கு அதிரச்சியாகவும் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.ஏனெனில் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அவர் போய் சந்திக்க வேண்டிய ஒருவர் தன்னை வந்து பார்த்து வாழ்த்தி வரவேற்றது கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.இதை அவரிடமே நேரில் சொன்னார்.இனிமேல் தேவை எனில் அழையுங்கள் நானே வருவேன் என்றார்.ஆனாலும் மீண்டும் சில தடவை அழைக்காமலே இராசதுரை வந்து பார்த்தார்.கொள்கை முரண்பாடு இருந்தபோதும் இராசதுரையின் இந்த பண்பு பற்குணத்துக்கு பிடித்திருந்தது .இராஜன் செல்வநாயகம் கவனிக்கவே இல்லை.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 19)” தொடர்ந்து வாசிக்க…)

சிவகரன் கைதானமைக்கு த.தே.கூ கண்டனம்

மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரனின் கைது உட்பட, இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்து, நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

இந்தக் கைது மாத்திரமல்லாமல், கடந்த சில நாட்களில் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல உத்தியோகபூர்வமான கைதுகளாக இல்லாமல், கடத்தப்பட்டுப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றமையானது, மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகக் காணப்படுகிறது.

இன்றைய கைது உட்பட இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்குக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் முக்கியஸ்தர் ராம் இன் கைதும் அவர்வழங்கிவரும் வாக்கு மூலமும் தற்போது நடைபெற்றுவரும் கைத்துகளின் பின்னணியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களினதும் உரிமைகளை வலியுறுத்தி காவத்தையில் கூட்டு மே தினம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000/= அதிகரிக்க கோரியும் ஆசிரிய உதவியாளர்களை நிரந்தரமாக்க கோரியும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க கோரியும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தியும் பல அமைப்புகளினது கூட்டு மே தினக் கூட்டம் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் எதிர்வரும் மே 01ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர் டபிள்யூ. சோமரட்ன, மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரன், சமூக சீராக்கல் இயக்கத்தின் அழைப்பாளர் எம். கமலதாசன் ஆகியோரின் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர். இக் கூட்டத்தில் உழைக்கும் மக்களின் தலைமையிலான சேசலிச சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சமூக மாற்றத்தை வேண்டிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

வெல்லப்போகும் பணநாயகம்

(அ. ராமசாமி)

ஜனநாயகத்தை உருவாக்கும் தேர்தலில் வாக்களிக்கும் அனுபவத்தைவிடக் கூடுதலான அனுபவத்தை எனக்கு உணர்த்திய தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் நண்பர் ரவிக்குமார் வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். அவரது தேர்தல் பிரசாரத்தின்போது அவர் போட்டியிட்ட தொகுதியில் குறுக்கும்நெடுக்குமாகப் பயணம் செய்தேன். அந்தப் பயணங்களின்போது நான் பெற்ற அனுபவங்களை அப்போதே காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறேன். அப்போது தொடங்கிய பணநாயகம் இப்போது பன்மடங்காகவும் பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது.

(“வெல்லப்போகும் பணநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 18 )

பற்குணம் நிர்வாக சேவைப் பயிற்சிக்காக மட்டக்களப்புக்கு போனார்.அங்கே இவரது பாடசாலைக் கால நண்பர் கதிர்காமநாதன் கிளாக் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இவர் உயர்சாதி எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்.படிக்கும் காலத்தில் சாதிபாகுபாடுகளை வெறுத்தவர்.எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோவார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 18 )” தொடர்ந்து வாசிக்க…)