தேவானந்தா காட்டிய பாதையில்….

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் திடீரென தேர்தற் கால ஞானோதயம், அருளோதயம், சிந்தனாதோதயம் என்ற எதோ ஒன்றைப் பெற்று விட்டதைப்போல, ஊரூராகச் சென்று வீதி அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார்கள். குளங்களைப் ஆழப்படுத் வேண்டும். வாய்க்கால்களையும் வடிகால்களையும் சீரமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் போன்றவற்றைப் புனரமைக்க உதவுகிறார்கள். விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்கள். இப்படிப் பல நற்பணிகள் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

(“தேவானந்தா காட்டிய பாதையில்….” தொடர்ந்து வாசிக்க…)

போடு புள்ளடி வீட்டுக்கு நேரே…????

அன்றைய தேர்தல் காலங்களில் தெருவெங்கும் ஒலித்தகோசம்.இப்போது மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தப் பாட்டு கோவில் உடுக்கு இசைபோல சகல தமிழனையும் கண்மண் தெரியாமல் ஆட வைக்கும். தமிழர்களை ஏமாற்றும் கலை அறிந்த கட்சி.இந்தக் கட்சியை தமிழர்களிடம் இருந்து அகற்றுவது சுலபமான காரியம் அல்ல.தமிழர்களிடம் அரசியல் செய்ய கொள்கைகள் எதுவும் தேவையில்லை. இனவாதம், மதவாதம், சாதிவாதம் இவைகளை இலகுவில் உள்வாங்கும் இனம் தமிழினம்.

(“போடு புள்ளடி வீட்டுக்கு நேரே…????” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலையில்

முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆலோசனையின் கீழ், T.ஸ்ரீதரன் தலைமையில் இயங்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி வடகிழக்கில் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும். தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலையில் சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தியது.

இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கும் இதுதான் நடக்கும் போல தெரியுது….

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடி போடும்படி கேட்கிறார்கள்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
அருந்தவபாலன் சயந்தனுக்கு ஹெல்மட்டால் அடித்தார்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
அஸ்மினும் ஜெயசேகரமும் சண்டை போடுகின்றனர்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அவசரப்பட்தாலா
அம்பாறையில் தமிழரசு வேட்புமனு நிராகரிக்கப்பட்டது?

தன் வீடு கட்ட கருங்கல்லும் மாபிள் கல்லும் இறக்குமதி செய்த
மாவை சேனாதிராசா, இவர்களுக்கு ஒரு கட்டு ஓலையாவது வாங்கிக் கொடுப்பாரா?

காணாமல் போனவர்களின் உறவுகள் 300 நாட்களாக போராடுகின்றனர்

கேப்பாப்பிலவு மக்கள் 280 நாட்களாக போராடுகின்றனர்

அரசியல்கைதிகள் விடுதலை கோரி போராடி வருகின்றனர்.

இவர்களுடைய எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள்
ஊள்ளு+ராட்சி தேர்தலில் போட்டியிட முனைவது எதற்காக?

முன்னாள் போராளிகளுக்கு தலா 56 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர்கூட இந்த தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை?

ஏன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்கூட வாய் திறக்கவில்லை?

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீடு

அன்புடையீர் …!!!!!

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ”இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீட்டிற்கு உங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் ..

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத்தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.இராதாமேதா அவர்கள் தலைமையிலும், எனது பாட்டி உலகம்மாள் மாரிமுத்து முன்னிலையிலும் இந்த புத்தகம் வெளியீடு காண்கிறது. இந்த சிறப்பு விழாவில் எனது அன்பு நண்பரும் அமைச்சருமான திரு.மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இடம் : தபால் திணைக்கள கேட்போர் கூடம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, மருதானை, கொழும்பு 11 திகதி : 20.01.2018 (சனிக்கிழமை) நேரம் : மாலை 4.30

இந்த நிகழ்வில் கிடைக்கும் நிதி, பின்தங்கிய பாடசாலைகளில் தண்ணீர் தாங்கி வழங்க பயன்படுத்துவதால் உங்கள் மனம்போல உதவுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன். என்றும் நட்புடன்

டன்ஸ்டன் மணி

ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள், அடக்குமுறையின் மோசமான விளைவுகளை அனுபவித்து வந்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில் அயலுறவுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை; அவை நலன் சார்ந்தவை. இதைப் பலரும் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

(“ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?

(நளினி ரத்னராஜா)
பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்
பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர். ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.

(“இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?” தொடர்ந்து வாசிக்க…)

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் 16ஆம் திகதி பொறுப்பேற்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16ஆம் திகதி பொறுப்பேற்கிறார். கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியாகியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

(“காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் 16ஆம் திகதி பொறுப்பேற்பு” தொடர்ந்து வாசிக்க…)

அம்பாறையில் 71 வேட்புமனுக்களில் 08 மனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்கவே அறிவிக்கப்பட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவென அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழு சார்பாக 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 08 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 63 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க தெரிவித்தார். இதன்போது 06 கட்சிகளினதும், 02 சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.

(“அம்பாறையில் 71 வேட்புமனுக்களில் 08 மனுக்கள் நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பெருந்தேசிய கட்சிகளின் முகவர்கள் வெற்றி பெற்றால்      முஸ்லிம் சமூகம் மீண்டும் உரிமைகளை இழக்க நேரும்!

(ரி. தர்மேந்திரன்)

புதிய கலப்பு தேர்தல் முறைமை பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக செயற்படுகின்ற சிறுதேசிய கட்சிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பை வழங்குவதாக உள்ளது, எனவே முஸ்லிம் தேசியம் கூட்டமைப்பாக ஒருமித்துதேசியத்துக்கான பொது சின்னத்தில் ஒன்றுபட்டால் மாத்திரமே தேசியமாக இக்கலப்பு முறைமையில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியும்இல்லாவிட்டால் பெருந்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் எமது உரிமைகளை இணக்க அரசியல் என்ற மாய வார்த்தையில் இழக்க நேரிடும் என்று கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் பிரதி தலைவர் எச். ஏ. ஆலிப் சப்ரி சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“பெருந்தேசிய கட்சிகளின் முகவர்கள் வெற்றி பெற்றால்      முஸ்லிம் சமூகம் மீண்டும் உரிமைகளை இழக்க நேரும்!” தொடர்ந்து வாசிக்க…)