இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) இறுதிப் பகுதி

ஆனால், இங்கே உயர் மத்தியதர வர்க்கத்தினரதும் பெரும் பணக்காரர்களினதும் விடயத்தில் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்ல. அந்த வர்க்கத்தினரின் – அந்த வகையினரின் நலன்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான மாற்றுத் தீர்வை வழங்குவதற்கு உடனடியாகவே விரைந்து செயற்படுவார்கள்.
இதற்கான ஊக்கி அவர்களது வர்க்க உறவுகளின் பண்பாட்டில் உணர்வுரீதியாக உள்ளடங்கியுள்ளது. உயர் மத்தியதர வர்க்கத்தினருக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் பணப் பெறுமதியின் வீழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்டிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது இங்கே வட்டி வீதங்களின் அதிகரிப்பின் ஒரு பிரதானமான இலக்கு என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். பணப் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்ட நட்டத்தை அவர்கள் குறுகிய காலத்தில் சரிக்கட்டிக் கொள்ள முடியாவிட்டாலும், உயர்வான வட்டி வீதத்தால் அவர்களுக்கு கணிசமாக உயர்ந்த அளவு வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’
என்பது போல வங்கிகளில் சிறிய அளவில் வைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பகுதி கீழ் மத்தியதர வர்க்கத்தினரும் இந்த வட்டி வீத அதிகரிப்பால் உள்ளுர மகிழ்ச்சி கொண்டிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. எனவே ஆட்சியாளருக்கு இந்த வட்டிவீத அதிகரிப்பால் அரசியல்ரீதியில் குறிப்பிடத்தக்க வகையில் நட்டமெதுவும் ஏற்பட்டு விடமாட்டாது எனலாம்.

இங்கு அன்றாடம் காய்ச்சிகளாக வாழுபவர்கள் யாரிடமாவது கடன் பெறப் போகும் போதும், அவசர அவசிய தேவைகளுக்காக கடன் பெற முனையும் கீழ் மத்தியதர வர்க்கத்தினருமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அரச
வங்கியில் தங்க நகைகளை அடைவு வைத்து கடன் பெறுவதற்குக் கூட 25 சதவீதம் வட்டி கொடுக்க வேண்டி உள்ளது. அரச வங்கிகளின் வட்டிவீதத்தை விட சுமார் 100 சதவீதம் அதிகமாக வட்டி அறவிடுவதே உள்ளுர்களில் கடன் கொடுக்கும் தனியார் கடைப்பிடிக்கும் மரபு. எனவே கீழ் மட்ட வாழ்க்கை நிலையில் உள்ளோரே இங்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
3 கடன்களை பெருமளவில் திரட்டவே அரசின் கவர்ச்சியான வட்டி வீதங்கள்

  1. அரசாங்கம் காட்டியுள்ள கணக்குப்படி 2022ம் ஆண்டு அரசாங்கம் அதனது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்கு உள்நாட்டுக்குள் வாங்கத் திட்டமிட்ட கடன் தொகை சுமார் 2 லட்சம் கோடி ரூபாக்கள்.
    ஆகஸ்ட்டில் வெளியிட்ட கணக்குப்படி அரசின் மொத்த உள்நாட்டுக்கடன் கிட்டத்தட்ட 12 லட்சத்து 500 ஆயிரம் கோடி ரூபாக்கள். அரசு உள்நாட்டில் வாங்கிய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல். 2022ம் ஆண்டு இலங்கை வெளி நாடுகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டிய 50 பில்லியன் டொலர் கடனின் பெறுமதி கடந்த மார்ச் மாதம் இலங்கை ரூபாயில் சுமார் 10 லட்சம் கோடி ரூபா மட்டுமே. ஆனால் இலங்கை ரூபாவின் அந்நிய செலாவணிப் பெறுமதி அமெரிக்க டொலருக்கு 360 ரூபா ஆனதனால் அந்த 50 பில்லியன் டொலரின் பெறுமானம் 18 லட்சம் கோடி ரூபா என ஆகி விட்டது.

இந்த ஆண்டு முடிவில் இலங்கையின் ரூபாவில் அந்த கடன்களின் பெறுமதி 20 லட்சம் கோடியையும் தாண்டி விடும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, இந்த ஆண்டு முடிவில், உள்நாட்டுக் கடனும் 14 லட்சம் கோடிகளை அண்மிக்கும் என்றே தெரிகின்றது. இதனால் அரசு அதற்காக செலுத்த வேண்டிய மொத்த வட்டித் தொகையும் அதிகரித்து விடும். அதில் எவ்வளவை அரசாங்கம் செலுத்தியது. அதில் அரசு எவ்வளவு தொகையை மேலும் செலுத்த வேண்டிய நிலுவையாக வைத்துள்ளது என்பதை அடுத்த ஆண்டு மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளிவரும் போதே தெரிய வரும்.

எவ்வாறாக இருந்த போதிலும், ஜனாதிபதியான ரணில் அவர்கள் நிதி அமைச்சராக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2023ம் ஆண்டுக்கு அரசாங்கம் பெற்ற கடன்களுக்கு வட்டியாக மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்குமென கணக்குக் காட்டியுள்ளார். 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது சுமார் 60 சதவீதத்தால் மேலதிகமாகும்.

இந்த திறைசேரி உறுதிப் பத்திரங்களையும் பிணை முறிகளையும் வெளிச் சந்தையில் கொடுத்து அரசால் போதியளவு கடன் பெற முடியவில்லை. இதனால் 2022ல் மட்டும் மத்திய வங்கியினால் அரசின் தேவைகளுக்காக இதுவரை சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டுக்கான அரச செலவுக்கு மட்டும் அரசாங்கம் எதிர்பார்க்கும் வெளிநாட்டுக்கடன் ஒரு லட்சம் கோடி ரூபாக்கள் – அதாவது கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டொலர்கள். இந்த அளவுக்கு அரச செலவுகளுக்கு வெளிநாட்டுக் கடன்கள் கிடைக்காவிடில் உள்நாட்டில் அரசல்லாத நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற வேண்டும். போதாதென்றால்
4
பணத்தை அச்சடிக்க வேண்டும். பணம் அச்சடிப்பதை மிக மிக குறைவாகவே மேற்கொள்ள வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் மறைமுகமான நிபந்தனை. 6 அல்லது 7 சதவீதமென திறைசேரிப் பத்திரங்களுக்கு வட்டி கொடுத்த போது அதனை வாங்குவோர் தொகை குறைந்து விட்டது. இதனால் அரசாங்கம் அதனது வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை ஈடு கட்டும் அளவுக்கு கடன்களைப் பெறுவதற்கு அரசு வழங்கும் வட்டி வீதங்களை மிகவும் கவர்ச்சிகரமான அளவுக்கு உயர்த்துகின்ற உபாயத்தையே இங்கு கடைப்பிடித்துள்ளது. அரசாங்கம் 6 மாதங்களுக்கு மேல் முதிர்ச்சி அடையும் திறைசேரிப் பத்திரங்களுக்கான வட்டியை 16 சதவீதத்துக்கு உயர்த்தியுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சா 2022க்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது திட்டமிட்ட அரச செலவு ரூபா 3 லட்சத்து 85 ஆயிரம் கோடி. ஆனால் 2022ம் ஆண்டுக்கான உண்மையான செலவு 4 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கும் மேல். அதேபோல் 2022 ஆண்டுக்கான பற்றாக்குறையாக முதலில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கோடி எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது உண்மையில் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் கோடியாகி விட்டது. எனவே 2023ம் ஆண்டின் பற்றாக்குறையும் ஜனாதிபதி ரணில் அவர்களினால் இப்போது கணிப்பிடப்பட்டுள்ளதை விட கணிசமாக அதிகரிக்கவே செய்யும். அதனால் அடுத்த ஆண்டுக்கு அரசு பெற வேண்டிய கடன் தொகையும் நிச்சயம் அதிகரிக்கும்.

கடன்களுக்கான வட்டி வீதங்களின் அதிகரிப்பு நாட்டின் உற்பத்தித் துறைகளையும் வர்த்தகத் துறைகளையும் நிச்சயம் பாதிக்கும். இந்தத் துறைகளின் செயற்பாடுகள் கடன் சுழற்சியிலேயே நடைபெறுகின்றன.

இந்தத்
துறைகள் வங்கிகளிடமிருந்து பெறும் மிகைப் பற்று (ழுஎநசனசயகவ) க்கு, அதாவது வங்கிகளில் தங்களது கணக்கில் இருக்கும் பணத் தொகைக்கு மேலாக பெறும்
குறுங்கால கடன்களை தொழில் நிறுவனங்கள் பெறுவதற்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் அறவிடுகின்றன. இந்தக் குறுங்காலக் கடன்கள் தொழில் நிறுவனங்களின் பணச்சுழற்சிக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், இப்போதுள்ள நிலையில் இந்த வட்டி வீதத்துக்கும் மேலாக லாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில்களாலேயே தப்பிப் பிழைக்க முடியும். இது பெருந் தொகையான தொழில்களை பாதிக்கும். ஏற்கனவே உற்பத்திகளின் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை கடன்களாலும் வட்டி வீதங்களாலும் மேலும் பாதகங்களை நோக்கியே பயணிக்கிறது.

கடன்களை வாங்கிக் குவித்து, இன்று திக்கற்று நிற்கிறான் இலங்கை வேந்தன்.