இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 6

தனியார் வங்கிகளோ போட்டி போட்டுக் கொண்டு 22 தொடக்கம் 26 சதவீதம் வரை நிலையான வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அறிவித்துள்ளன. இதேபோலவே, 6 மாதங்களுக்கு மேலாக முதிர்ச்சி பெறும் வகையான திறைசேரி உறுதிப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகளின் அடிப்படையில் அரசு பெறும் கடன்களுக்கான வட்டிவீதங்களும் 16 சதவீதங்களுக்கு மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டி வீதங்களெல்லாம், கடந்த மார்ச் மாதத்துக்கு முந்திய நிலைமைகளோடு ஒப்பிடுகிற போது இரண்டு
மடங்குக்கும் அதிகமாகும். இதேவேளை, வங்கிகளிலிருந்து பொதுவாக மக்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பெறும் கடனுக்கான வட்டிவீதங்கள் அரச வங்கிகளிற் கூட 25 சதவீதங்களுக்கு மேலேயே உள்ளன.
இவ்வாறாக வட்டி வீதங்களை அதிகரித்தது பணவீக்கத்தை அதாவது பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண அதிகரிப்பைக் குறைப்பதற்கே என அரச நிதி அமைப்புகள் கூறுகின்றன. இதன் மூலம் நாட்டில் சுழற்சியில் இருக்கும் பணத்தில் கணிசமான பகுதி வங்கிகளை நோக்கி இழுக்கப்படும் எனவும், அதன் மூலம் மக்களினால் வங்கியில் சேமிப்பாக வைக்கப்படும் பணம் அதிகரிக்கப ;படும் எனவும், அதன் மூலம் பொருட்களை வாங்குவது (கேள்வி) குறையும் எனவும், அதன் மூலம் சந்தையில் விலைகள் வீழ்ச்சியடையுமெனவும், அதன் மூலம் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பணவீக்கம் குறையும் எனவும் அரசு சார் பொருளாதார நிர்வாகிகளால் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக எழும் ஏனைய கேள்விகள் ஒரு புறமிருக்க, மேலே குறிப்பிட்டவாறு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட ;டு 6 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் பொருட்களின் விலைகள் சந்தைக் காரணியால் இன்னமும் குறையவில்லை என்பது வெளிப்படை. சில முக்கியமான உணவுப் பொருட்களின், குறிப்பாக அரிசி, சீனி, மைசூர் பருப்பு, வெள்ளை மாவு போன்றனவற்றினதும் பெற்றோலியப் பொருட்களினதும் விலைகளை சற்றுக் குறைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் அவற்றின் இறக்குமதிகளை குறிப்பிட்டளவு அதிகரித்திருக்கின்றது. அதன்மூலம் அவற்றின் விலைகள் சற்றுக் குறைய வழி வகுத்துள்ளது. ஆனால், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், உணவுப் பொருட்கள் உட்பட எந்தவொரு பொருளினது விலையும் குறைந்ததாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறையாதது மட்டுமல்ல, நாளாந்தம் சிறிது சிறிதாக உயர்ந்தே செல்கின்றன என்பதை மத்திய வங்கி வெளியிடுகின்ற அன்றாட சந்தை விலை நிலவர அறிக்கைகளும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற பெரும் நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிடும் விலைப் பட்டியல்களும், சில நாளேடுகள் அன்றாடம் வெளியிடும் சந்தைகளில் நிலவும் விலை விபரப் பட்டியல்களும் தெளிவாகக் காட்டுகின்றன.
பாலுக்குக் காவலாக பூனைகள் மகா நிபுண மாதன முத்தர்கள்

  1. வங்கிகளின் வட்டி வீதங்களை அதிகரித்ததன் நோக்கம் சந்தையில் சுழன்று கொண்டிருக்கும் பண அளவைக் குறைப்பதுதான் என்றால், நாட்டின் மொத்த உற்பத்திகள் – வழங்கல்கள் வீழ்ச்சியடைந்திருக்கிற இன்றைய சூழலில், மத்திய வங்கியைக் கொண்டு பணத்தை அச்சிட்டு, அரசாங்கம் அவற்றை தனது செலவுகளினூடாக சந்தைக்குள் சுழல விடக் கூடாது. ஆனால் இந்த அரசாங்கம் இந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரையான காலப்பகுதியில் மட்டும் அறுபத்தொன்பதாயிரத்து நூறு கோடி ரூபாய்களை அச்சடித்து வெளியிட்டுள்ளது (31, ஒக்டோபர் 2022 –னுயுஐடுலு குவு). இந்த ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண விலைகள் உயர்வுக்கு, அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதிகள் குறைக்கப்பட்டதுவும், நாட்டில் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் மட்டுமல்ல, பணத்தை கண்மூடித் தனமாக அச்சிட்டு வெளியிட்டதுவும் ஒரு பிரதான காரணமென்பதை அனுபவம் மிக்க பொருளாதார நிபுணர்கள் தெளிவாகவே மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார்கள்..
    பணத்தை பெருந் தொகையில் அச்சடித்து அவற்றை சந்தையில் சுழல விடுவது மட்டுமல்ல, அதேவேளை மறைமுக வரிகளையும் அரசாங்கம் உயர்த்தியுள்ளது. வற் வரி (ஏயுவு) யை 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக்கி பின்னர் அதனை 18 சதவீதமாக்கியிருக்கின்றது. சமூக பாதுகாப்பு வரி என 2.5 (இரண்டரை) சதவீதமாக இன்னுமொரு மறைமுக வரியையும் விதித்துள்ளது. மறைமுக வரிகள ; நிச்சயமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பான பண்டங்களின் விலைகளை அதிகரிக்கும். அது இறுதியில் நுகர்வோர் மற்றும் ஏனைய வகைகளில் கொள்வனவு செய்யும் பண்டங்களின் விலைகளை உயர்த்தும் என்பது அடிப்படைப் பொருளியல் அறிவு உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயமே. மறைமுக வரிகள் என்பது உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்தே அரசு அறவிடுகிறதென்றாலும், உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் பொருட்களினதும் சேவைகளினதும் விலைகளை உயர்த்தி அந்த வரிகளையும் நுகர்வோர் – வாங்குவோர் மீதே சுமத்தி விடுகிறார்கள்.
    எனவே இந்த மறைமுக வரிகளும் பண்டங்களினது விலைகளை மேலும் உயர்த்தி விடுகின்றன. அந்த வகையில் அரசாங்கம் ஒரு பக்கம் பண்டங்களினது விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, மறுபுறமாக, பண்டங்களின் விலைகளை அதிகரி;க்கும் வேலைகளையும் தானே செய்கின்றது.
    மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கும் கதை
  2. மக்களின் கொள்வனவு சக்தியை அரசாங்கம் திட்டம் போட்டு சட்டம் போட்டு குறைக்க வேண்டிய அவசியமில்லை. பொருட்களின் தட்டுப்பாடுகளும் விலையேற்றங்களும் மக்களின் வாங்கும் சக்தியை ஏற்கனவே குறைத்து விட்டது.
    2019ல் மாதம ; 60 ஆயிரம் ரூபா மாத வருமானம் பெற்ற ஒரு நபருக்கு கடந்த மூன்று அண்டுகளில் மொத்தமாக 10 சதவீதம் தொடக்கம் அதிக பட்சம் 15 சதவீத அளவுக்கு மட்டுமே சம்பள அதிகரிப்பு நடந்திருக்கிறது. அந்தளவுக்கு அதிகரிப்பு அனைத்து உழைப்பாளர்களுக்கும் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். அது ஒருபுறமிருக்க, 15 சதவீத உயர்வு என்று பார்த்தாலும் கூட, முன்னர் 60 ஆயிரம் சம்பளமாக பெற்றவர் இப்போது 69 ஆயிரம் ரூபா மட்டுமே பெறுகிறார். ஆனால் 2019ம் ஆண்டு சுமார் 30 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிய அளவுக்கு பொருட்களை இப்போது 69000 ரூபாவுக்கு வாங்க முடியாது. 2019ல் வாங்கிய பொருட்களின் அளவோடு ஒப்பிட்டால் இன்று அதேயளவு பணத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைவான அளவு பொருட்களை மட்டுமே வாங்க முடிகின்றது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தினதும் விலைகள் பெரும்பாலும் இரண்டரை மடங்குக்கு மேலாகவே அதிகரித்துள்ளன. அனைத்து பொருட்களினதும் விலைகளில் சராசரியாக ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இரண்டரை மடங்கெனக் கொண்டால், அதன் மறுபக்க உண்மையானது, வருமானத்தின் மெய்யான பெறுமதி அறுபது சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்து விட்டது என்பதே. அதாவது முன்னர் 100 பொருட்களை வாங்கிய அதே பணத்துக்கு இப்போது 40 பொருட்களை மட்டுமே வாங்க முடிகிறது என்பதே அர்த்தமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் படி ஊழியர்களின் – தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டிருக்குமாக இருந்தால், அதாவது சென்ற வருடம் 60 ஆயிரம் ரூபா சம்பளம் பெற்ற ஓர் ஊழியருக்கு இந்த ஆண்டு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் ரூபாவாவது சம்பளம் கிடைக்க வேண்டும்.
    ஆனால், அதிகரித்திருக்க வேண்டிய சமபளத்தோடு ஒப்பிடுகையில் அதிகரித்திருக்கிற சம்பளம் வெறுமனே 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. அரச துறைகளில் மட்டுமல்ல அனைத்து தனியார் துறைகளிலும் இதுவே நிலைமை.
    நாளாந்த வருமானம் பெறும் கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் நாட்கூலியாக 40 அல்லது 50 சதவீதம் அதிகமாக கூலி பெறுகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களிற் பெரும்பாலானோருக்கு வேலை கிடைப்பதனை மாத அளவில் அல்லது வருட அளவில் பார்த்தால் அது கிட்டத்தட்ட அரைவாசியாகி விட்டது. தனியார் உற்பத்தி மற்றும் வர்த்தக தொழில் நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சிறிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அது அவர்களின் கொள்வனவு சக்தியினுடைய பெருமளவு வீழ்ச்சியை எந்த வகையிலும் குறிப்பிடத்தக்க அளவு தடுத்து விடவில்லை. எனவே மிகப் பெரும்பான்மையான சதவீத மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சேமிக்கின்ற அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை. மிக அடிப்படையான சீவனோபாய அளவிலேயே வருமானம் பெறுகின்ற மக்களிடமிருந்து பணத்தை வங்கிகளை நோக்கி வரப்பண்ணுவதற்கான திட்டமே வட்டி வீதங்களின் ஏற்றம் என்பதனை எந்த வகையிலும் சரியானதாக – பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    மாறாக, இது பரந்துபட்ட பொதுமக்களுக்கும், நாட்டின் தேசிய பொருளாதார நலன்களுக்கும் பாதகமானதாகவே அமையும். இது அரசுசார் பொருளாதார நிபுணர்களுக்கு புரியவில்லை என்று சொல்ல முடியாது. இதில் ஏதோ வேறு சில மர்மங்கள் உள்ளன.
    (பகுதி 7ல் தொடரும்.)