150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள்  அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்.

முகத்துவாரம் வெட்டப்பட்டது…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள், மற்றும் பொரும்போகத்துக்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்களும், விவசாயிகளும், முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் ஞாயிற்றுக்கிழமை(06) வெட்டப்பட்டது.

பறவைகளின் எச்சத்தால் வாழ்ந்த தேசம் இன்று?

தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு சிறிய தீவு. 21 சதுர மைல்கள் பரப்பளவையும் 10,000 க்கு உட்பட்ட குடி மக்களையும் கொண்ட நாடு.சிறிய சிறிய திட்டுகள், பாறைகள் நிறைந்த இந்த தேசம் ஒரு காலத்தில் மீன் வளம் நிறைந்து காணப்பட்டது.

புலிகள் எங்களிடம் சரணடையவில்லை

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு சற்றுமுன்னர் (03) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது. 

3ஆம் முறை பதவியேற்ற ஷீயின் இராஜதந்திர சந்திப்புகள்

தனது தேசத்தின் உலகளாவிய செல்வாக்கை அதிகரிப்பதாக சபதம் செய்துள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் பல வெளிநாடுகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியானார் ‘லுலு டா சில்வா

உலகின் 4-ஆவது மிகப் பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 11 பேர் போட்டியிட்ட போதும், வலதுசாரி தலைவரான ஜனாதிபதி ஜெயீர் பொல்சொனாரோவுக்கும்,   இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வாவுக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது.

இலங்கையில் மாகாணசபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 3)

(அ. வரதராஜா பெருமாள் )

தேர்தலுக்காக சட்டரீதியாகவும் செயற்படவில்லை 

மாற்று சட்ட மூலத்துக்கும் முயற்சிக்கவில்லை 

மாகாண சபைத் தேர்தல்களை ஆட்சியாளர்கள் நடத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் அதனை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியற் பிரமுகர்கள் அவ்வப்போது தமது ஊடக அறிக்கைகள் மற்றும் பேட்டிகளில் கூறி வருகிற போதிலும், அது தொடர்பான தொடர்ச்சியான காத்திரமான அரசியற் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றே. தங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருக்கிறது – அது இருந்தால் ‘போதுமடா சாமி’ என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றாலும், இது தொடர்பாக மாகாண, மாவட்ட மற்றும் உள்ளுர் மட்டங்களில் உள்ள சமூகப் பிரமுகர்கள, அரசியல் அக்கறை கொண்ட இளம் தலைமுறையினர் ஏன் தமது கட்சித் தலைமைகளை மாகாண சபைகள் தொடர்பில் காத்திரமாகச் செயற்படுவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை – குரல்களை எழுப்பவில்லை என்பது இங்கு ஒரு பெரும் கேள்வியாகவே உள்ளது.