நேற்று 11 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

ஐ.எம்.எப் பேச்சுவார்த்தை: வெற்றி பெறுவதில் வெற்றி

ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்த புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சனிக்கிழமை(14) மதியம் 12.20 மணியளவில் கையெழுத்திடப்பட்டது.

பொங்காத பொங்கல்!

(வீ.ஏ.கந்தசாமி)

(தைப்பாங்கல் தினத்தை முன்னிட்டு, 56 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இக்கட்டுரை, இலங்கையின் இன்றைய நிலைமைக்குமான பொருத்தப்பாடு கருதி பிரசுரமாகின்றது)

மக்களின் உற்பத்திக்கான போராட்டத்தில் உதித்தது பொங்கல் தினம். உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட, சமுதாய நடைமுறையின் வெளிப்பாடாக முன்வந்த பொங்கல் தினம், தமிழர் சமுதாயத்தின் தனித்துவமான தினமாக உயர்ந்து நிற்கிறது.

கணிதம்

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.

நிகரகுவா குடிமக்கள் நிம்மதியாக உணரும் உலகின் # 1 நாடு

முக்கிய நிறுவனமான கேலப் நடத்திய கருத்துக் கணிப்பில், குடிமக்கள் நிம்மதியாக உணரும் உலகின் நம்பர் 1 நாடாக நிகரகுவா உள்ளது. முதல் 14 நாடுகளில் ஒன்பது லத்தீன் அமெரிக்காவில் உள்ளன. ஆனால் அமெரிக்கா தொடர்ந்து சாண்டினிஸ்டா அரசாங்கத்தை தாக்கி அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.

பணமதிப்பு நீக்கம் துரிதப்படுத்துகிறது: தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க டாலர் மேலாதிக்கத்திற்கான முடிவின் ஆரம்பம்?

உலக சமூகம் தங்கள் பொருளாதாரங்களை மதிப்பிழக்கச் செய்யும் முக்கிய நகர்வுகளை அமெரிக்கா எதிர்கொள்கிறது. அமெரிக்க டாலரின் ஒரு வேளை விரைவில் இல்லை என்றாலும் இருப்பு நிலை இறுதியில் முடிவுக்கு வரும்,

ரெஜினோல்ட் குரே காலமானார்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

யாழில் மீனவர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர். குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக  சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி

இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.