தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)

1965 பொதுத் தேர்தலின் பின் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சன்னியர் செல்லையாவுக்கு எதிராக வெள்ளையன் சின்னதம்பி என்பவர் எமது வட்டாரத்தில் களத்தில் இறக்கப்பட்டார்.இவர் மிகவும் சரச்சைக்குரியவர்.சின்னதுரையின் தங்கையின் கணவர்.நடராசாவின் மைத்துனரின் மாமனார் .இத்தேர்தலில் செல்லையா தோற்கடிக்கப்பட்டார் .அவரால் இயக்கப்பட்ட வெல்ல தொழிற்சாலை செயலிழந்தது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)” தொடர்ந்து வாசிக்க…)

படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !

(சலசலப்பு என்ற இணையத் தளம் வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. இக்கட்டுரையூடாவே இவர்கள் அம்பலப்படுவதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சியை ஒழித்து நின்று கொண்டு காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் இழிச்செயல்களை அம்பலப்படுத்துவதற்காகவும் அவர்களின் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் – ஆர்)

1987ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையின் போது தாக்குப்பிடிக்க முடியாமல் புலிகள் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்தது. வட-கிழக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு, தற்காலிகமாக இணைந்த வட கிழக்கின் மாகாண சபையை ஆளுகின்ற அரிய சந்தர்ப்பம் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்திற்கே கிடைத்தது.

(“படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)

எமது ஊரில் 1921 இல் றோ.க.பாடசாலை சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது.ஆனாலும் மதம் மாற விரும்பாத காரணங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .நீண்ட காலங்களுக்கு பின் நடராசா,சின்னத்தம்பி,சிங்கபாகு ஆகிய மூவரும் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வி படிக்க புறப்பட்டனர்.நடராசா 9 வது வகுப்புடன் நிறுத்திவிட்டார்.பின்னர் சில காலத்தின்பின் சங்கத்தானையில் படித்தார்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன.

(“ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை. இது இந்திய ஊடகங்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக புதுடில்லியைத் தளமாக கொண்ட ஆங்கில ஊடகங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

(“தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அது பாவச் செயலாக இருந்தாலும் சரி நல்ல செயலாக இருந்தாலும் சரி ஏதோ ஒருவகையில் அதற்கான பெறுபேறு கிடைக்கும். இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் செய்(த)வினை செய்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை கிடைக்க விடாமல் செய்வதற்கு அவர்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல,எந்த வகையில் எல்லாம் அரசியல் தீர்வு கிடைக்க கூடாது என்று நினைத்தார்களோ அதை எல்லாம் இழுத்து மூடினார்கள். இதன் விளைவு தான் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம். அதுவும் இறுதியில் இரத்த ஆற்றோடு முடிவுக்கு வந்தது.

(“மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியா உதவவில்லை – வரதர்! இந்தியா உதவ வேண்டும் – விக்கி?

இந்தியா சமஸ்டி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உதவவில்லை என்று இந்தியாவின் அரவணைப்பில் இருக்கும் முன்னாள் மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள் கூறியிருக்கிறார். ஆனால் சமஸ்டி அதிகாரங்களை பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று இந்நாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் கேட்டிருக்கிறார். இந்தியா தமிழ் மக்களுக்கு இதுவரை உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தியா உதவ வேண்டும் என்று கேட்பதன் மர்மம் என்ன? தமிழ்மக்கள் மீதான இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா உதவவேண்டும் என்று இன்னமும் கேட்பதன் அரசியல் என்ன? இலுப்பம் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று முன்பு சொன்னார்கள். வந்தது வெளவால் அல்ல, இந்தியா என்ற குள்ள நரி என்று கண்டோம்.

(“இந்தியா உதவவில்லை – வரதர்! இந்தியா உதவ வேண்டும் – விக்கி?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)

வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம், மீண்டும் உசாரடைந்து இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில், தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின், முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான், முஸ்லிம் தனி மாகாணம் என்பதாகும்.

(“முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!” தொடர்ந்து வாசிக்க…)