தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)

வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

சில நாட்களின் பின் எமது உறவுக்கார இளைஞர் ஒருவர் அச்சுவேலி பத்மமேனிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பினார்.வரும்போது அச்சுவேலி பஸ் ஸ்ராண்ட் களபேரமடைந்து காணப்பட்டது.தவராசனும் அவனது கூட்டாளிகளும் சாதியைச் சொல்லி சிலரை அடிக்க எவனுமே திருப்பி அடிப்பதாக இல்லை.அப்போது சொன்னானாம் ஆனானப்பட்ட காட்டுவாடி இரத்தினத்தையே போட்டவன் நான். என இறுமாப்பாக சொல்லி அடித்தான்.இதை கண்ணால் கண்டவர் நமது ஊர் போராளி.அவரும் வந்து விசயத்தை சொல்ல உடனே திட்டம் தீட்டப்பட்டது .இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வாள்கள் என்பன கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்து நம்பிக்கையானவரகளிடம் கொடுக்கப்பட்டது.எல்லாம் ரெடி.நாளையும. தீர்மானித்து வந்தார்கள்.அவரகள் மீண்டும் துப்பாக்கியை கிணற்றில் போட்டுவிட்டார்கள்.எமது போராளிகள் கோபமும் எரிச்சலும். அடைந்தார்கள்.

இனிப் போய் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.வேடிக்கை என்னவென்றால் நமது ஊரவர்களுக்கு தவராசன் யார் என அடையாளம் தெரியாது. அவனைக் காட்ட நம்பிக்கையானவரகளைக் கேட்டால் அவர்களும் தயாராக இல்லை.இறுதியில் குணம் என்பவர் ஒத்துக்கொண்டார்,அது கூட வேடிக்கை .அவர் சொன்னது அவன் வரும்போது அவளருகின்றன நின்று விசில் அடிப்பேன். அதில் எவன் உயரமானவனோ அவன்தான் தவராசன் .ஏற்கனவே நம்மவரும் ஒரு தடவை பாரத்ததால் சரி என சொல்லிவிட்டார்கள்.

இதில் இன்னொரு முடிவை எடுத்தார்கள்.வேலாயுதம. தப்பியதுபோல இவனும். தப்பக்கூடாது.வெடிவைக்கும்போது தப்பினால்அவனை வெட்டிக் கொல்லவேண்டும் .யாரை விடுவது துணிவான அதேநேரம் தோற்றமில்லாதவர்களே தேவை.ஏனெனில் அவன் சந்தேகப்படக் கூடாது.இருவர் தயாரானாரகள்.ஆனால் அவர்கள் இருவரையும் தவராசன் ஒரு கையாலேயே போட்டுவிடுவான்.எனினும் அவர்கள் துணிவோடு களம் உறங்கினார்கள்.

தவராசன் வரும்நேரம் யாருக்கும் தெரியாமல் ஒரு கடைமேலே துப்பாக்கிகளுடன் சின்னத்தம்பி செல்லத்துரை,காசிப்பிள்ளை துப்பாக்கியுடன் தயாரானார்கள்.தவராசன் வர அவன் அருகே சென்ற குணம் விசிலடித்துவிட்டு ஓட்டம் பிடித்தார்.காசிப்பிள்ளை முதல்வெடி வைத்தார். இலக்கு தவறியது.ஏற்பாடு செய்த இளைஞர்கள் தவராசனுக்கு அருகே வாளை ஓங்கியபடியே வந்தனர்.தவராசன் காணவில்லை.அவன் துணிவாகவே சத்தம்போட்டு வெடிவந்த திசையை பார்க்கிறான்.அடுத்த துப்பாக்கி செல்லத்துரை,அங்கே அவன் பின்னால் நிற்பவர்கள் அவரது இரத்த உறவுப்பெடியள்.அவரகளைக் காட்டித் வெடிவைக்க தயங்கினார்.வெடி அவரகள்மீது பட்டால் என்னவாகும் என்றார்.அப்போது காசிப்பிள்ளை சொன்னார் நீ இப்ப வைச்சாலும் வைக்காவிட்டாலும். அவளங்களை தவராசன் கண்டால் சாவுதான்.வை என்றார்.மனங்கேளாத செல்லத்துரை காலை குறிவைத்து வெடிவைக்க தவராசன் வீழ்ந்தான் ஒரு வாயக்காலுக்குள்.அவனுடன் வந்தவன் தப்பி ஓடிவிட்டான்.பின்னால் நின்ற இளைஞர்கள் அவன் அருகே வாளுடன் சென்று அவனை எழும்பவிடாமல் தடுக்க எல்லோரும் வந்து அவனைத் தூக்கி நிறுத்தி நீதானா இரத்தினத்தை கொலை செய்தாய் கேட்டனர்.அவன் ஓம் என்று உயிருக்கு மன்றாட இவர்கள் விடவில்லை.இதை மந்துவிலிருந்து வந்து நாங்களே உன்னை கொல்கிறோம் என சொல்லி இருவர் தூக்கிப்பிடிக்க நெஞ்சில் வெடி வீழ்ந்தது.அப்படியே வாய்க்காலில் போட்டுவிட்டு ஊர் திரும்பினார்கள்.

இதுவும் ஒரு யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இவரகள் இங்கே வந்ததும் எமது ஊர் இளைஞர்கள் உடனே சைக்கிளில் வந்து தவராசன் உடலைப் பார்த்து திரும்பினர்.இதைத் தொடர்ந்து ஏனைய எதிரிகள் எச்சரிக்கையுடன் தலைமறைவானார்கள்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)