யாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இன்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.

சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்

வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் வழக்கம்போல் மெரினா கடற்கரையில் கூடி மகிழ்ந்த பொதுமக்கள். சென்னையில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு

இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கையர்களுள், இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு சுயவிருப்பம் கொண்டுள்ளவர்கள் தொடர்பான ஆய்வொன்றை, இந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது என, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு ‘தீர்வைத் தருவேன்’ – மஹிந்த ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வைத் தன்னால் தரமுடியுமெனவும் அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, தமிழர் பிரதிநிதிகள் தயாராக இருக்கவேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.

‘கொடுத்த வாக்குறுதியை, ஜனாதிபதி மறந்தாலும் நாங்கள் கைவிடோம்’


இந்நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அவற்றைக் கைவிடப்போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானஅறிக்கையைநிராகரித்தரெலோ; கூட்டமைப்புக்குள்குழப்பம்?!

நாடாளுமன்றத்தில்முன்வைக்கப்பட்டிருக்கும்அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானநிபுணர்குழுவின்அறிக்கையைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பங்காளிக்கட்சியானதமிழ்ஈழவிடுதலைஇயக்கம் (ரெலோ) அடியோடுநிராகரித்துள்ளதுடன், அந்த அமைப்பின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன்எம்.பி., செயலாளர்நாயகம் ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்துஇன்று (20) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். (“அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானஅறிக்கையைநிராகரித்தரெலோ; கூட்டமைப்புக்குள்குழப்பம்?!” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். (“தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

நாளை ( சனிக்கிழமை) நிகழ்வு – ஈஸ்தாம்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான 1000/= சம்பளக் கோரிக்கைக்கான எமது ஒருமைப்பாடும், அக்கோரிக்கையின் பின்னுள்ள அடிப்படை நியாயங்களுக்கான முன்வைப்புகளும்….

கலந்துரையாடலும் கருத்துக்களும்…

(“நாளை ( சனிக்கிழமை) நிகழ்வு – ஈஸ்தாம்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு நீர் விவகாரம்; முன்மொழிவுகளுக்குப் பரிந்துரை

இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 சதவீதமான நீரை, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்றிட்ட அலுவலகத்துக்கு, இன்று (18) திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், நிலைமைகளை ஆரய்ந்தார். (“இரணைமடு நீர் விவகாரம்; முன்மொழிவுகளுக்குப் பரிந்துரை” தொடர்ந்து வாசிக்க…)