சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்

சென்னையில் நேற்று காலை 7 மணிக்கு திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக வட சென்னை பகுதிகளில் அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சில விநாடிகளே இந்த அதிர்வு நீடித்தது. கடலோரப் பகுதி என்பதால் சுனாமி ஆபத்து நேரிடலாம் என்ற அச்சமும் நிலவி யது. சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எனினும், இந்த அதிர்வால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் எஸ்.பாலசந்திரன் கூறியதா வது: இந்திய நேரப்படி காலை 7.02 மணிக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென் னைக்கு கிழக்கே 602 கி.மீ துாரத் தில், கடல்மட்டத்துக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள் ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமான், சென்னை பகுதிகளில் உள்ள நிலநடுக்க மானியில் 5.1 ரிக்டர் அளவில் பதிவானது. இது அளவில் லேசான நிகழ்வாகும்.

நிலநடுக்கம் கடல் பகுதிகளி லேயே நிலவியதால் பெரிய பாதிப்பு இல்லை. இதனால் சுனாமி எச் சரிக்கை அபாயமும் இல்லை. எனி னும், வட சென்னை, தெற்கு ஆந்திரா, வடக்கு அந்தமான் ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு கள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக் கம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விரிவான தகவல்கள் பின்னர் அறிவிக்கப் படும். வதந்திகளை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.