கொழும்பு பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றார். அவர், அங்கு நடைபெறும்   பொதுநலவாய  கற்றல்  நிர்வாகக்  குழுவில்  கலந்து  கொள்வார். பொதுநலவாய கற்றல்  நிர்வாகக்  குழு  கனடாவின் வான்கூவரில் ஜூன் 24 முதல் 26 வரை நடைபெறும்.

பரந்தன் கெமிக்கல்ஸ் தலைவர் நேசராஜன்

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. அந்தக் குழு 2025.06.20 ஆம் திகதி பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்?

போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.  முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈரான் தாக்குதல் கச்சா எண்ணையின் விலை அதிரடியாக உயர்வு

ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு திங்கட்கிழமை  (23) இன்று உயர்ந்துள்ளது.

ஈரான் விமான நிலையங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்

ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.  ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்காச்சோள விற்பனையில் மோசடி

நாட்டின் மக்காச்சோள அறுவடையை குறைந்த விலைக்கு வாங்கி, சேமித்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடியில் பல இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று விவசாய அமைச்சகத்தின் செயலாளர் டி.ஜி.விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிப்பு

மத்திய மலைநாட்டில்  திங்கட்கிழமை (23) அதிகாலை முதல் நிலவும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் அதை ஆண்டிய வீதிகளில் இவ்வாறு கடும் பனி நிலவுகிறது. குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

அ’புர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு ஓகஸ்ட் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.