சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?

பலமான அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. 2004 ம் ஆண்டுத் தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் மூலம் பெற்றுக் கொண்டு, அவ்வமைப்பையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு,எம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தபடி இருந்து விட்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு வழிவகுத்துஅவர்களைஅரசுக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

(“சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?

அஇஅதிமுக தேர்தல் அறிக்கை இலவசங்களை அள்ளித் தெளித்துள்ளது. இதை விமர்சிக்கும் திமுகவினர் தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடனை அடைக்க என்ன வழி என்கின்றனர்.

திமுக மதுவிலக்கை அமல்படுத்தி, விவசாய கடனை தள்ளுபடி செய்து, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்து, பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்து, இந்த 2 லட்சம் கோடி கடனை எப்படி குறைப்போம் என்று சற்று விளக்கினால் நன்று.

(“தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?” தொடர்ந்து வாசிக்க…)

தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை

பாராளுமன்றத்தில் கண்ணியத்துக்கும், கௌரவத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சபை நடுவில் கைகலப்பில் ஈடுபட்ட பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும (ஐ.தே.க) மற்றும் கம்பஹா மாவட்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒருவாரகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

(“தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்

பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(“ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் நடைபெற்ற மே தினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து தொழிலாளர் உரிமை தினமான மே தின நிகழ்வை நடாத்துவது வழக்கம். இம் முறையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள் இணைந்து சிந்தனை செயற்பாட்டு மையம் என்ற ஐக்கிய அமைப்பின் கீழ் மே தின நிகழ்வை நடாத்தினர். இதில் பழம் பெரும் தமிழ் இடதுசாரிகள். தொழிற் சங்கவாதிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஈபிடிபி, சம உரிமை இயக்கம். ரேலோ, புளொட் அமைப்பினர் கனடா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

(“கனடாவில் நடைபெற்ற மே தினம்” தொடர்ந்து வாசிக்க…)

நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.

(“நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு” தொடர்ந்து வாசிக்க…)

7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முக்கியமான ஏழு விடயங்களை உப-குழுக்கள் வசம் ஒப்படைக்காது தாமே கையாள்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிப்படுத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் வடிவம், தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு நியமங்கள் (கொள்கை) மற்றும் காணி ஆகிய ஏழு விடயங்களையே, வழிப்படுத்தல் குழு தம்வசம் வைத்துக்கொள்ளவுள்ளது.
வழிப்படுத்தல் குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, நாடாளுமன்ற பணியாற்றொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமும், வழிபடுத்தல் குழுவின் செயலாளருமான நீல் இத்தவெல விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)

“கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

(““கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”” தொடர்ந்து வாசிக்க…)

தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

மார்க்ச்சிச- லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வடபுல செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளருமான தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

இடம்:- கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
58,தர்மாராம வீதி, கொழும்பு – 06
காலம் :- 08 மே 2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- மாலை 4.30 மணி
தலைமை:
க. இராஜரட்ணம்
உரைகள்:
· நீர்வை பொன்னையன்
· வை.கருணைநாதன்
· இரா. தர்மலிங்கம்
அனைவரும் வருக

ஏற்பாடு:
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு

‘அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராணுவம் இன்றித் தூக்கம் வராவிட்டால் அவர், வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்’ என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03), ஒன்றிணைந்த எதிரணியினால் எழுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்து உரையாற்றிய பின்னர், உரையாற்றும் போதே அமைச்சர் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

(“தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)