24 மணி நேரத்துக்குள் பாரிய மாற்றம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக வீரவன்ச தெரிவித்தார். இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.

இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்படியொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததே இல்லை என்றுதான் உலக ஊடகங்கள் அனைத்துமே விமர்சிக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் பொறுக்க முடியாது என்ற கோபத்துடன் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடத் தொடங்கினர். அடுத்தடுத்து இரண்டு நாட்களும் போராட்டம் நடைபெற இரவோடு இரவாக அவசரநிலையை பிரகடன்ப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இப்போதும் நாடு தழுவிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்

(நாதன்)

நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக… கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

ஏப்ரல் 4ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது.

’நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.

பல இடங்களில் காலையில் பதற்றம்

நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா ​போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கோட்டாவின் வீட்டின் முன் நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு என்ன? நடந்தது என்பது தொடர்பில், “உண்மை” என்ற பதாகையின் கீழ், அரசாங்க தரபின்னர் விளக்கமளிக்கவுள்ளனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுககேகொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

11 பங்காளிகளும் “காபந்து” கேட்கின்றனர்

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோாிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

தொகுப்பாளரை அறைந்த நடிகர்: ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு

2022-ம் ஆண்டு ஆஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை விழாவில் பங்கேற்று விருது வென்ற நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.