கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்

இன்று இரவும் மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருதப் படுவதால் இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. அத்துடன் இன்று மாலை, இந்திய போர் கப்பலான “விக்ரமாதித்யா”, 4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரே நாளில் ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை இலங்கையின் இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள்.