ஆப்கானிஸ்தான்: பொம்மைகளில் இனிமேல் தலை இருக்கக் கூடாது

மேலும் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளையும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடையகங்களில் உள்ள அலங்கார பொம்மைகளில் தலை இருக்கக் கூடாது என்ற புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, ‘மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.

அவர்கள் தலையை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆடையகங்களிலுள்ள பொம்மைகளின் தலைகளை சிலர் துண்டிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.