இலங்கை: மழை நிலவரம்

கேகாலை, குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதுளை, கம்பஹா, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை,  களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பெலாரஸ் எல்லையில் அகதிகளை முடக்கிய போலந்து

பெலாரஸுடனான போலந்தின் கிழக்கு எல்லையில் போலந்துக்குள் நுழைய முயன்ற அகதிகளின் முயற்சிகளை முறியடித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.

பெரியண்ணை தோழர்

பெரியண்ணை என தோழர்களால் அழைக்கப்படும் அரியகுட்டி ஜோன் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியை தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மானிப்பாய் நவாலியை சேர்ந்த அவர் வவுனியாவில் வசித்து வந்தார். அன்னாரது நல்லடக்கம் நாளை (10.11.2021) வவுனியாவில் பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாளாந்தம் கூடுகிறது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 538  பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெள்ளத்தில்  மிதக்கின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார்.

விவசாயிகளின் மட்டு. பேரணியால் பதற்றம்

மட்டக்களப்பில் நகருக்குள் பேரணியாக நுழைந்த விவசாயிகளால் நகரத்தில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் முற்றுகையிடப்பட்டது.

மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 23 பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

ரூ.10,000 சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக் கோரி, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஊழியர்களால், திணைக்களத்துக்கு முன்பாக இன்று (08) பிற்பகல்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரூ.160 கோடி இழப்பீடு கோருகிறது சீன நிறுவனம்

‘அலட்சிய நடத்தை’ காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் இழப்பு ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.160 கோடி) வழங்குமாறு கோரி, சீனாவின் சேதன உர உற்பத்தியாளரான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குறூப் கம்பனியானது, தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.