வடக்கின் புதிய ஆளுநர் பதவியேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் பதவியேற்றார்.

தாய்வான் விரைவில் சீனாவுடன் இணையும்

தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்  நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சபதம் ஏற்றிருக்கிறார்.

பொருளியலுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜொஷ்வா டி அங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளியல் விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளதாக நோபல்  பரிசுக்குழு அறிவித்துள்ளது.

தேடப்பட்ட திமுக எம்.பி சரண்

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நிலையில்,திராவிட முன்னேற்ற கழக  எம்.பி., ரமேஷ் இன்று 11 ஆம் திகதி  பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன். நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை.

கொரோனா மரணங்கள் வவுனியாவில் அதிகரிக்க என்ன காரணம்?

(க. அகரன்)

உலகினை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் உலக வல்லரசுகளே ஆட்டம் கண்டுள்ள நிலையில், இலங்கையில் 2020ஆம் ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவல் நிலையை அடைந்திருந்த போதிலும் அதன் உயிரிழப்பு வீதம் குறைவாகவே காணப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. அது ஜனநாயக செயற்பாடுகளில்  அடிப்படையை மீறுவதாகும் என  முன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவர், துரை மதியுக ராஜா தெரிவித்தார். இன்று (19)  கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துறைமுக நகருக்கு மக்கள் செல்லலாம்

கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரந்த கடல் பகுதியை நிரப்ப கட்டப்பட்டது கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சீன துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், முதல் கட்ட கட்டுமானத்தின் 99 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் துறைமுக நகர இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கடுமையாக குறைந்த கொரோனா மரணங்கள்…. நாட்டில் மேலும் 560 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 526,223 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 468 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  480,097 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் வலுக்கும் போராட்டம்

அனைத்து பணியிடங்களிலும் சுகாதார அனுமதி அட்டை கட்டாயம் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, இத்தாலியின் ரோம் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சில இடங்களில் பொலிஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.