தாய்வான் விரைவில் சீனாவுடன் இணையும்

இது தொடர்பில் சீன கிரேட் மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சீன ஜனாதிபதி தெரிவித்ததாவது, 
   
 “ சீனா அமைதியான முறையில் தாய்வானுடன் ஒன்றிணைய விரும்புகிறது. தாய்வானின் சுதந்திரப் பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. 

சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும். “ என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தாய்வான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

“சீனா கனவு காண்கிறது. தலிபான்கள் வழியை பின்பற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்வோம்“ என்று தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்திருந்தார்.

சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் தாய்வான் உருவானது என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவைப்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன ஜனாதிபதி சில மாதங்களுக்கு கூறி இருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.