அநுராதபுரம் சிறைக்கு விரைந்த மனோ கணேசன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர்  இன்று (18) சென்றுள்ளனர்.

சீனாவுக்கு எதிராக 3 நாடுகள் கூட்டணி

இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பாதுகாப்புக் கூட்டணி அமைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) காலை கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணி கூட்டத்திலே​யே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு!

உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர்.

’குழு நியமிக்கவும்: அதுவரை அமர்வுகளை புறக்கணிக்கவும்’

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை  தொடர்பில் சுயாதீன விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் வாகனப் பிரசார பேரணி

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முதன் முறையாக, யாழ்ப்பாணத்தில், இன்று (14), சேதனமுறையில் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வாகனப் பிரசார பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாண விவசாய திணைக்களம் இந்தப் பிரசார பேரணியை ஏற்பாட்டு செய்திருந்தது.

பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதும் மறுக்கபட்டு வருகிறது. தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. 

எதிர்காலத்தில் விலை மேலும் அதிகரிக்கும்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.