இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையும் கடுமையாக சரிவு….

நாட்டில் மேலும் 542 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 520,175 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 652 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது.

ரோஹித ராஜபக்ஷ முதலமைச்சர் வேட்பாளர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்குள் நுழையும் ஆப்கான் போதைப் பொருட்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், மும்பை உட்பட அரபிக்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக வந்து செல்லுவதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையும் அபாயம்

அடுத்த 45 ஆண்டுகளில் சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையுமென்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது. முந்தைய ஆய்வுகள்  சனத்தொகை வீழ்ச்சியின் வேகத்தை கடுமையாகக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம்  பிறப்பு வீதம் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.3 குழந்தைகளாக இருந்ததாக சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. 

இலங்கை: கொரனா செய்திகள்

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின:

1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்

2. அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்

3. பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்

4. பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை

5. சாப்பாட்டு விடுதிக்கு அனுமதி இல்லை

6.மரண வீட்டில் ஒரே தடவையில் 10 பேர் பங்கேற்கலாம்

7..உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி ஐவர் பங்கேற்கலாம்.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சிறை

கடந்த அதிமுக ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட சென்னை சிறப்பு நீதிமன்றம், இந்திரகுமாரிக்கும் கணவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தலிபான்களுக்கு இந்தியா-அமெரிக்கா வலியுறுத்து

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ அல்லது பயங்கரவாதக்குழுக்களுக்கு அடைக்கலம் அளிக்கவோ பயன்படுத்தமாட்டோம் என்பதை உறுதி செய்யவேண்டுமென்று இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்திக்கூறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு செயலாளர் வர்தன் சிரிங்லா கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தலிபான் செயல்பாடுகள் இவற்றை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

திலீபனுக்கு அஞ்சலி: கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு, இன்று (28) மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 642 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 515,234 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 743 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.

தலிபான்கள் விடயத்தில் ரஷ்யா சந்தேகம்

ஐக்கிய நாடுகள்: ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் தலிபான்கள் விடயத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களாகிய தலிபான்கள் நேர்மையுடன் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா, தீவிரவாதம் பரவுவதை தடுக்கிறார்களா போன்றவற்றை  நிச்சியப்படுத்திக்கொள்ளும் வகையில் இணைந்து செயல்படுகின்றோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்ஜெவ் லெவ்ரோவ்  தெரிவித்தார். இந்த நான்கு நாடுகளும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,