மத்திய மாகாணத்தில் 45,000 கொரோனா தொற்றாளர்கள்

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இதுவரை 45,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய நகரங்களை நாளையிலிருந்து (19) ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு,வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நியூசிலாந்தில் முழு முடக்கம்

ஒரு புதிய கொவிட் -19 இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு தழுவிய முழுமையான பூட்டுதலை நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். இந்த புதிய தொற்றாளர்கள் ஒக்லாந்தில் இனங்காணப்பட்டார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

’நெருக்கடியை தீருங்கள்’ மன்றாடுகிறது மன்றம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரால் ஏற்படும் நெரிசல் காரணமாக வைத்தியசாலை அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரம், இன்று (17) மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் ஆகியன இணைந்து, இந்த பிரசார நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுப்புக்குளம், அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் முழு விவரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் மற்றுமொரு தடவை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமைச்சுக்கள் சில கைமாற்றப்பட்டன.

1. ஜி.எல்.பீரிஸ்-  வெளிநாட்டலுவல்கள்
2. தினேஸ் குணவர்தன-  கல்வி
3. பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து
4.. கெஹலிய ரம்புக்வெல –சுகாதாரம்
5. காமினி லொக்குகே- மின்சக்தி
6. டலஸ் அழகபெரும- ஊடகம்
7. நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கு மேலதிகமாக அபிவிருத்திகளை மேற்பார்வை செய்யும் அமைச்சர்

கவலை கொண்டார் மலாலா

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது.  பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை

தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுவதாகத் தெரிவித்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 3,640 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 358,608 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் பிந்திக்கிடைத்த 3,640 தொற்றாளர்களின் எண்ணிக்கையை மொத்தத் தொகையுடன் சேர்த்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.