காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை’

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்குவதற்கு, இன்னும் 10 வருடங்கள் தேவைப்படுவதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார். நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன், பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம், வவுனியா – இறம்பைவெட்டி கிராமத்தில், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று கிழக்கில் 915 ஆகியது

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்று (24) வரை 915 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே, கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 406 தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 406பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 388 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய 18 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது.

கன்னியாஸ்திரீ வழக்கு; பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

கிட்டங்கியில்…

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பாய்கின்றமையால், அவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்தும் மழை; மட்டு., அம்பாறையில் 10,840 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,840 குடும்பங்களைச் சேர்ந்த 36,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் ஆடுகிறது கொரோனா, ஐவர் தனிமை

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் உட்பட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட ஐந்து பேர், இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய கப்பல் சேவைக் குறித்து ஆய்வு

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்காலுக்கிடையே கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தனர். இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

’புதியவகைக் கொரோனா நாடுமுழுவதிலும் பரவியுள்ளது’

புதியவகைக் கொரோனா வைரஸ் பிரித்தானிய முழுவதும் பரவியுள்ளதாக அந்நாட்டின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்கசன் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலானோருக்கு அல்லது முழு ஐரோப்பாவுக்கும் புதியவகைக் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறைந்த தொற்றாளர்களைக் கொண்ட டென்மார்க்கிலும் இந்த கொரோனா இனங்காணப்பட்டிருப்பதாகவும், இது ஐரோப்பா முழுவதிலும் பரவியிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் போராடிய 33 விவசாயிகள் இறப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய்த் திறக்காதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.