இப்படியும் இளைஞர்கள்

இன்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் பணத்தை வைப்புச் செய்துவிட்டு மீதிப்பணமான 75,000/= ரூபாவை வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிளிநொச்சி #சிவபாதகலையகம் பாடசாலையின் ஆசிரியர் திரு வ. புஸ்பராசா Pushpa Rajah என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது 75,000/= பணம் தவறி விழந்து காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை – ராகுல் காந்தி

கற்பனையில் வேண்டுமானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கலாம். ஆனால், உண்மையில், இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து இஸ்ரேலில் தேர்தல்

இஸ்ரேலின் ஒன்றிணைந்த அரசாங்கத்திலுள்ள இரண்டு கட்சிகளும் அரச வரவு செலவுத் திட்டம் தொடர்பான பிரச்சினையொன்றில் இறுதிநிலையை அடையத் தவறிய நிலையில், இரண்டாண்டுகளில் நான்காவது தேர்தல்களை அந்நாடு நடத்தவுள்ளது.

கொவிட்-19 முற்றுகைக்குள் ஐ. அமெரிக்கா

பிந்தைய கொவிட்-19 அதிகரிப்பால் நோயாளர்களுக்கு படுக்கைகளைக் கண்டுபிடிக்க வைத்தியசாலைகள் திண்டாடுகையில், கிறிஸ்மஸ்ஸுக்கு பயணிக்க வேண்டாமென ஐ. அமெரிக்கர்கள் நேற்று மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை’

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்குவதற்கு, இன்னும் 10 வருடங்கள் தேவைப்படுவதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார். நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன், பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம், வவுனியா – இறம்பைவெட்டி கிராமத்தில், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று கிழக்கில் 915 ஆகியது

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்று (24) வரை 915 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே, கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 406 தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 406பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 388 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய 18 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது.

கன்னியாஸ்திரீ வழக்கு; பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

கிட்டங்கியில்…

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பாய்கின்றமையால், அவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்தும் மழை; மட்டு., அம்பாறையில் 10,840 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,840 குடும்பங்களைச் சேர்ந்த 36,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.