33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி டெல்லியில் சிங் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வயதான விவசாயிகளும் தங்கள் உரிமைக்வும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடுகிறார்கள்.

இந்த கடுங்குளிரால் பாதித்த 33 விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இறந்தனர். 33 விவசாயிகளின் இறப்பை அடுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் 33 விவசாயிகள் இறப்பு குறித்து மோடி ஒரு வார்த்தையை கூட உதிர்க்காதது ஏன், நமக்கு உணவளிப்பவர்கள் டெல்லி எல்லையில் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் போராடி வருகிறார்கள் எனவும் பேசினார்.