வடக்கு சந்தைகளுக்கு பூட்டு

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலியாகொட கொத்தணியைச் சேர்ந்த 300 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 12 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை-நபீர்வத்த முடக்கம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் கொரனா நிலவரம்

கல்முனை:

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையாக உள்ள பகுதிகள், இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஜினியின் ’மக்கள் சேவை கட்சி; ஆட்டோ சின்னம்’

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும் இம்மாதம் 31 ஆம்திகதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

குளிக்கும் பனிக்குமிடையே; தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம்

இன்று 20ஆவது நாளாக போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், இதன், ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொண்டனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

நாளை முதல் ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தைவாய்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் விசேட வேலைத்திட்டமொன்று நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதிலிருந்து உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும் என, கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

19 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாஸாக்கள் விவகாரம்; ஆராய்வதாக மாலைத்தீவு அறிவிப்பு

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்வதுத் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையை, மாலைத்தீவின் ஜனாதிபதி ஆராய்ந்துப் பார்ப்பதாக தெரிவித்துள்ளாரென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹிடத் தெரிவித்துள்ளார்.