இப்படியும் இளைஞர்கள்

உடனே வந்த வழியே திரும்பிச் சென்ற அவர் அவ்வழியே பலரையும் விசாரித்தும் பணம் கிடைக்கவில்லை. மிகக்கவலையுடன் அவ்வீதியில் இருந்த கடைகளிலும் மாவட்டச் செயலக பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் கிளிநொச்சி சந்தையின் விளம்பர ஒலிபரப்பு ஆகியவற்றிலும் தனது தொலைபேசி இலக்கத்தை தெரிவித்து அறிவிப்புச்செய்தும் எதுவித பலனும் கிடைக்கவில்லை. மிகக் கவலையோடு பாரதி புரத்திலுள்ள தனது இல்லத்துக்கு சென்று வீட்டுக்கும் இதனைத் தெரிவிக்காமல் மிகவருத்தத்துடன் இருந்த அவருக்கு சில மணித்தியாலம் கடந்ததும் தொலைபேசி ஊடாக அதிர்ச்சியான செய்தியொன்று கிடைத்தது.

ஆசிரியரைத் தொடர்புகொண்ட ஒருவர் குறித்த பணத்தினை தானும் நண்பர்களும் எடுத்ததாகவும் உங்களது முகவரியைத் தெரிவித்தால் அதனை வீட்டுக்கு கொண்டுவந்து ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர். இதனைக்கேட்ட ஆசிரியர் வேண்டுமென்றே தன்னைக் கலாய்க்கிறார்களோ என்று சந்தேகப்பட்டதுடன் தனது வீட்டு முகவரியைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்துள்ளார்.

சிலநிமிடங்களில் வீட்டுக்கு வந்த அவ்இளைஞர்கள். தாம் அம்பாள் புரத்தைச் சேர்ந்த வர்கள் என்றும் தாம் அவ்வழியே வரும்போது முதலில் ஒரு ஐயாயிரம் ரூபாயைக் கண்டதாகவும் பின்னர் வழிநெடுகிலும் மொத்த எழுபத்தையாயிரம் ரூபாயும் சிந்திக் கிடந்ததாகவும் அதனைச் சேகரித்த பின்னர் யாராவது தவறவிட்டுள்ளார்களா என்று அப்பகுதியில் விசாரணை செய்தபோது உங்களது என்று அறிந்து உரியவரிடம் சேர்ப்பிக்க வந்ததாகவும் தெரிவித்து பணம் முழுவதையுமே குறித்த ஆசிரியரிடம் வழங்கினர்.

அவர்களின் இந்த முன்னுதாரணமான செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்து போன ஆசிரியர் அவர்களுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய எண்ணி 10,000/= ரூபாயை வழங்க முன்வந்தபோதும் அவர்கள் அதனை மறுக்கவே மீண்டும் 5,000/= ரூபாய் ஆவது பெறுமாறு வற்புறுத்தியும்.
“நாங்கள் செய்த காரியத்தையும் எங்களையும் மலினப்படுத்தாதீர்கள். இதனை உங்களிடம் பெற்றால் இலஞ்சம் பெறுவதற்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை”.

எனத் தெரிவித்து அதனை அடியோடு மறுத்து விட்டனர். அந்த மூவரில் இருவர் #அம்பாள்புரத்தைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவர். மற்றவர், அவர்கள் இருவருக்கும் மைத்துனன் முறையானவர் என்றும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.

கஞ்சாவுக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி அதனைத் தொடர வழியில்லாமல் கொள்ளை வழிப்பறித் திருட்டு என்று சில இளைஞர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் இக்காலத்தில் விழுந்து சிதறிக் கிடந்த பணத்தை எடுத்துச் சேகரித்து, தொலைத்தவர் யார் என்று விசாரித்து, அவரைத்தேடிப்பிடித்து, நேரில் அவரின் வீட்டைக்கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ள இவர்களை எப்படிச் சொல்வது?


ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்ல. கிளிநொச்சியிலும் இருக்கிறார்கள். (கீழே பதிவிட்டுள்ள படம் அந்த நிஜ ஹீரோக்கள் இன்று 24.12.2020 மதியம் பணத்தை ஒப்படைக்கவென பாரதிபுரத்திற்கு வீடுதேடி வந்தபோது எடுக்கப்பட்ட படம்)
(Va Vadivalakaiyan)