சிவனொளிபாத மலையில் அறுவர் கைது

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இன்று பலத்த மழை வீழ்ச்சிக்கான சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நவம்பர் மாத ’அனுர மீட்டர்’

‘அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.

’முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சி

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த  போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது  ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

டிட்வாவில் உயிரிழந்தவர்களும் தியாகிகளே: திலகர்

டிட்வா சூறாவளியுடனான மண்சரிவுகளில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பலத்த மழை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொஹரா புஹாரிக்கு ஒரு வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது.