100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போர்த்துக்கல்லின் பயிற்றுவிப்பாளராக றொபேர்ட்டோ மார்டினெஸ்

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பெல்ஜியத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் றொபேர்ட்டோ மார்ட்டினெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை மேலுயர்த்தும் மொழிப் பன்முகத்தன்மை?

20 க்கும் மேற்பட்ட தனித்தனி அதிகாரபூர்வ மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரபூர்வமற்ற மொழிகளைக் கொண்ட இந்தியா, மொழியியல் ரீதியாக மிகவும் வேறுபட்டது.

23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு

(எம்.எஸ்.எம் ஐயூப்)

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும், அது நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

வாக்களிக்கமாட்டோம்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை, தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்கவேண்டும் அப்படி முன்வைக்காவிட்டால் மக்களாகிய நாங்கள் தேர்தலில் வீடு, தேடிவரும் போது வாக்களிக்கமாட்டோம் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (10 ஜனவரி) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா முழுவதும் விமான சேவை ஸ்தம்பிதம்

ஒன்றிணைந்த விமான நிர்வாக கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை விரைவாக அதைத் தீர்ப்பதற்கு செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா, மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா

1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.

தன்னிறைவு பெற்றது வெனிசுலா!

(Maniam Shanmugam)


2022ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எண்ணெய் அல்லாத துறைகளில் 14.49 விழுக்காடு வளர்ச்சியை எட்டி வெனி சுலா சாதனை புரிந்துள்ளது. எண்ணெய் வளத்தை நம்பி மட்டுமே தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்து வந்த வெனிசுலா, திட்டமிட்ட செயல்பாடுகளுடன் எண்ணெய் அல்லாத துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை – 04

அந்தக் காலகட்டத்தில் இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறது. உலகின் முதலாவது பெண் பிரதமர் என்று உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்த சிறிமாவோ அம்மையாரின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் அவர் சந்திக்கின்ற முதலாவது பொதுத் தேர்தல் அது.

செல்வி ஃபாத்திமா ஷேக்

(தோழர். Latheef Khan)

இன்று சமூகப் பெண்ணிய வாதியும் சமூகப் போராளியும் இந்தியஇஸ்லாமிய சமுதாயத்தின் முதல் கல்வியாளரும், முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியருமான செல்வி ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191 வது பிறந்தநாள்.