போராளிகளின் தந்தை மரணம்

மறைந்த தோழர்கள் இளங்கோ (ரவீந்திரன்) ,ஜான் ( காண்டீபன்) ஆகியோரின் தந்தையார் கணபதிப்பிள்ளை(93 )அவர்கள் கனடாவில் மறைவு .அவர் தென்மராட்சி மண்ணின் மாண்புறு மனிதர் . கவிஞர் வில்லிசை பல்துறை கலைஞர் அவருடைய கலை ஆற்றல் அவரது பிள்ளைகள் இளங்கோ, ஜானிடமும் காணப்பட்டது .இரண்டு பிள்ளைகளின் அகால மறைவு.பேரழப்புக்களை சந்தித்த குடும்பத்தின் தலைவர். எம் இதய அஞ்சலிகள்!

2002 குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படம்!

இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் மதவன்முறையில், அன்றைய முதல்வரான நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக பிபிசி வெளியிட்ட ஆவ ணப்படம் விவாதங்களைக் கிளப்பியிருந்த நிலையில், இந்த ஆவணப்படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கியூபா தனித்து விடப்படவில்லை: நாங்கள் இருக்கிறோம்!

1 ) புரட்சிக்கான நம்பிக்கையின் வடிவமாக கியூபாவும், சேகுவேராவும் – திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், புரட்சி என்ற சொல்லை நினைக்கும் போதெல்லாம் கண் முன்னே தோன்றுவது சேகுவேராதான். அதை அலெய்டா குவேரா முகத்தில் நான் காண்கி றேன் என்றார்.

ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார்

சென்னை தன்டையார்பேட்டையில் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலைத்திறப்பு விழாவை ஒட்டி மறுநாள் 31-1-.66 அன்று ” ஜீவா வாழ்க்கை வரலாறு ’’ நூல் வெளியீட்டு விழாவில், தோழர் பாலதண்டாயுதம் அவர்களால் எழுதப்பட்ட காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் வரலாற்றை வெளியிட்டு ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார் பேசுகையில்

வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் ,இந்திய வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளனர்.

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதவி விலகுகிறார் நியூஸிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள  தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் தனது பதவி  பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினிமலிசம்

மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள். மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் தேவையான அளவில் கொண்டு வாழுதல்.

வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகல்

வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார்.  ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவர் இராஜினாமா செய்துள்ளார். அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது