தன்னிறைவு பெற்றது வெனிசுலா!

எந்திரங்கள், வேதிப் பொருட்கள், உலோ கங்கள், நெகிழி, ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட் கள் ஆகியவற்றின் உற்பத்தி பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. இந்தத் துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், போக்குவரத்து மற்றும் சரக்கு சேமித்தல்(54.35 விழுக்காடு), கட்டுமானம்(34.45 விழுக்காடு) மற்றும் சில்லரை வர்த்தகம்(25.28 விழுக்காடு) ஆகிய துறைகளி லும் நல்ல வளர்ச்சி எட்டப்பட்டிருக் கிறது.

இந்த வளர்ச்சி 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கியது என்று வெனிசுலா வின் மத்திய வங்கி கூறியுள்ளது. நிகோலஸ் மதுரோ தலைமை யிலான இடதுசாரி அரசின் நட வடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த வளர்ச்சி:

வெனிசுலாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.73 விழுக்காடு அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “இந்த வளர்ச்சி என்பது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக இருந்து வருகிறது. இது சாதகமான அம்சமாகும். தேசிய அளவில் உற்பத்தி அதிகரித்திருப் பதையே காட்டுகிறது” என்று தெரி விக்கப்பட்டிருக்கிறது.

வரும் ஆண்டில், தென் அமெரிக்க நாடு களிலேயே வெனிசுலாவில்தான் அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எண்ணெய்த்துறை அல்லாதவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றி வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பெருமையாகக் குறிப்பிட்டு ள்ளார்.

அவர் கூறுகையில், “கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாகவே எண்ணெய் வளத்தைச் சார்ந்தே வெனிசுலாவின் பொருளா தாரம் இருந்து வந்திருக்கிறது. முதன் முறையாக, எண்ணெய் அல்லாத பொருளாதாரம், அதாவது உணவு மற்றும் சேவைகள் உள்ளிட்ட துறை கள் நல்ல வளர்ச்சியைக்கண்டுள் ளன. இந்தத் துறைகள் மூலம் கிடைக் கும் வரிகள் சாதனை படைக்கும் வகையில் இருக்கின்றன” என்றார்.

விவசாயத்துறையில் பெரும் சாதனையை வெனிசுலா படைத் திருக்கிறது. உணவுப் பொருட்கள் உற்பத்தியில் நாட்டுக்குத் தேவை யானவற்றில் 94 விழுக்காட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்கிறோம் என்று மதுரோ குறிப் பிட்டார்.

மேலும் கூறிய அவர், “இது வரையில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வந்த நாம், அதை நம்பி இருக்கப் போவ தில்லை. இது விவசாய அற்புதம். நூற்றுக்கணக்கான விவசாயி களின் உழைப்பால் சாத்தியமாகி யிருக்கிறது” என்றார்.

ஆனால் அவர் இத்துடன் திருப்தி அடையவில்லை. இன்னும் பெரிய இடைவெளி இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், “பொருளா தார வளர்ச்சி என்பது முக்கியமானது தான் என்றாலும், மேலும் பல்வேறு துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதேவேளையில், ஏகாதிபத்தி யத்தின் சித்ரவதைகளுக்கு நாம் தொடர்ந்து ஆளாகி வருகிறோம்.

இருப்பினும், புதிய பொருளா தாரத்தை உருவாக்கிக்காட்டியுள் ளோம். இந்தப் பாதையில் தொட ர்ந்து நடைபோடப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

எண்ணெய் அல்லாத துறை களில் கவனம் செலுத்தினாலும், எண்ணெய் துறையை மேம்படுத்து வதற்கான பணிகளும் தொடர்கின் றன. உலகிலேயே எண்ணெய் வளத்தில் நான்காவது இடத்தில் வெனிசுலா இருந்து வருகிறது. இந்தத் துறையிலும் 2022 ஆம் ஆண்டில் முதல் ஒன்பது மாதங் களில் செயல்பாடுகள் அதிகரித் துள்ளன. ஒரு நாளைக்கு 6 லட்சம் முதல் 7 லட்சம் பீப்பாய்கள் வரை யில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை அதிகரிக்கும் திட்டங்களை யும் வெனிசுலா தீட்டியிருக்கிறது.