எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 18)

(அ. வரதராஜா பெருமாள்)

இக்கட்டுரைத் தொடரின் கடந்த சில பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் சில முக்கியமான துறை சார் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் எவ்வாறான பலயீனமான நிலைமைகள் உள்ளன என்பதனை அவதானித்தோம். இப்போது நாட்டில் அரசாங்கத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிகப் பிரதானமான பேசு பொருளாக இருக்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஒரு பிரதானமான இடத்தை வகிக்கின்றமையானது அனைவரும் அறிந்த விடயமே.

75 ரூபாய்

வேளாங்கண்ணி அருகே எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கிறார்.

நண்பர் என்றால் பள்ளி நட்போ கல்லூரி நட்போ இல்லை ஜூஸ் கடை நட்பு. ஆம் அவர் ஜூஸ் கடை வைத்திருக்கிறார்.

வேளாங்கண்ணி தாண்டும் போதெல்லாம் என் வண்டி அனிச்சையாக அந்த ஜூஸ் கடையில் நின்று விடும்.

கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் : மூவ​ர் கைது

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் அந்தப் படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவரென மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனர்த்தம் நேற்று(23) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பஸ் தீப்பற்றி எரிந்ததில் 45 பேர் உயிரிழப்பு

பல்கேரியாவில், பயணிகள் பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்ததில்  45 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கிண்ணியா துன்பியல்

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், வீடுகளுக்குள்ளே முடங்கிய மாணவர்கள், பட்டாம் பூச்சிகள் இரண்டு சிறகுகளையும் அடித்துக்கொண்டு, எவ்வளவு சுதந்திரமாகப் பறந்துதிரியுமோ, அதேபோன்றுதான்,  புன்முறுவலுடன் பாடசாலைகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாளாந்தம் உயர்கிறது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 518 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 559,378 ஆக அதிகரித்துள்ளது.

மாணவச் செல்வங்களுக்கு அஞ்சலி

(சாகரன்)

மூச்சை நிறுத்தி…… புத்தகத்தை காக்க உயர்ந்த கரங்கள்…

(செய்தி: குறிஞ்சாங்கேணி/கிண்ணியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி பலர் மரணம்)

சின்னஞ் சிறு

கரங்களினிலே

சிறு புத்தகம்

காவி

பெருங்கனவு சமைக்க

பள்ளி சென்ற

என் பாலகனே

உன் கால்கள்

துள்ளி ஓடா

இடமுண்டோ

துரு துருவென்றிருந்த

உன் கண்கள்

உறங்காதோ

நீச்சலிலும் நீ

சூரன் அன்றோ

அந்த கொடிய

சுழி நீர்

உன்னை காவு கொண்டதோ

கரம் கொடுத்து

கல்வி கொடுக்கும்

ஆசிரியரும்

தத்தளிக்கும் உன்னைக்

காப்பாற்ற

ஆவலக் குரல் எழுபியதோ

வாப்பாவும் உம்மாவும்

கரையில் நின்று…

கடலில் பாய்ந்து

உனைக்காப்பாற்ற

முனைந்தனவோ

மூன்று நிமிட

மூச்சடக்கும் திறன்

மூளையை

சாவடையச் செய்தனவோ

என் பிள்ளையே

என் கால்களும் கரங்களும்

துடிக்கின்றது

அருகில் இருந்தால்

நான் அந்த ஆழியில்

பாய்ந்து

காத்து இருக்க மாட்டேனோ

என் காலம்

முடிவை நோக்கி

வந்து கொண்டிருக்கின்றது

அந்த முடிவை

உன் உயிர்காப்பதில்

விடுதல் ஒன்று இழப்பு இல்லையே

இது என் குரலின் குரலல்ல

பலரின் குரல்

கடல் வண்டி கட்டி

சுழி ஓடி

சுற்றிச்சுற்றி ஓடி

காப்பாற்றிய

அந்த பெருமக்கள்

பெருமானாரின் அவதாரங்களே

இனி ஒரு வள்ளம்

இது போல் வேண்டாம்

இருக்கும் பாதையை

செப்பனிட முன்பு

கடல் வழிப் பாதை

சரி செய்திருக்க வேண்டாமோ

அதிகாரம் கண்ணை மூடிவிட்டதோ

கிழக்கின் அடையாளம்

காத்தான் குடி என்பார்

நான் சொல்வேன்

அது கிண்ணியா என்று

பால்ய வயதில்

கடல் கடந்து

அங்கு வந்த போது

நான் பரிதவித்ததும்

நினைவில் வந்து போனதே

கூட வந்த

தாத்தாவும்

தன்னுயிர் பிரிய முன்பு

பல கரம் பற்றி

உன்னை காப்பாற்ற

நீச்சல்தான் அடித்திருப்பார்

கால்களிலும் கைகளிலும்

வலுக் குறைக இருந்திருந்தாலும்

அந்த வாப்பாவிடம்

இருந்திருக்குமல்லோ

மனவலிமை

தன் பேராண்டியை

காப்பாற்ற

இறுதி மூச்சு வரை

இரைஞ்சிருப்பாரல்லவோ

அந்த கோணேசர்

குமரனுக்கும்

இந்த அவலக் குரல்

கேட்கவில்லையோ

மயிலில் பறந்து வந்து

தன் சிறகில் இருத்து

உன்னை காத்தருளி

மத நல்லிணத்தை

காத்திடவில்லையே

அந்த வகையில்

அந்த குமரன் மீது

எனக்கு

தீராத கோவம்தான்

உன் சன்னதியிற்கு

அடுத்த முறை

வரும் போது

இதற்கு நியாயம் கேட்க

எனது காக்க தோழருடன்

இணைந்தே வருவேன்

புராணம் பாடி

என்னை சமாதானப்படுத்தலாம் என்று

நினைக்காதே

எமது கண்ணீருக்கு

கதை சொல்வதை விடுத்து

காரியத்தை ஆற்று

எம் பிள்ளைகள்

பாதுகாத்து கடல் கடந்து

கற்பதற்கு

அடுக்கி வைத்த புத்தகங்களாக

வெள்ளைத் துணியால்

உங்கள் வெள்ளை ஆடை

உடலம் மறைத்த

அந்த புகைப்படம்

ம்…… வேறு என்ன சொல்ல

இறுதி மூச்சிலும்

உன் புத்தகத்தை

காப்பாற்ற

நீ உயர்த்திய கரத்தை

நான் அறிவேன்

என் செல்வங்களே…….!

ஆறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23)  தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியாவில் பதற்றம்

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள்  அறுவர் மரணமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலைமையொன்று தோன்றியுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்கின்றனர். உயிரிழந்த சிறார்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.