எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 18)

(அ. வரதராஜா பெருமாள்)

இக்கட்டுரைத் தொடரின் கடந்த சில பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் சில முக்கியமான துறை சார் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் எவ்வாறான பலயீனமான நிலைமைகள் உள்ளன என்பதனை அவதானித்தோம். இப்போது நாட்டில் அரசாங்கத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிகப் பிரதானமான பேசு பொருளாக இருக்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஒரு பிரதானமான இடத்தை வகிக்கின்றமையானது அனைவரும் அறிந்த விடயமே.