இந்திய நீர்மூழ்கி தூத்துக்குடி வருகை

சமீபகாலமாக வங்காள ‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதால் தென்னிந்திய கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வருகையாக இது பார்க்கப்படுகிறது.

தென்பகுதியான தமிழகக் கடலோரம் இலங்கைப் பகுதியில், சீனா தன் கப்பற்படையை வலிமைப் படுத்திவருகிறது. தென்தமிழகத்தில், நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்திலுள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், புதிதாக குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ’ரொக்கெட் ஏவுதளம்’ என மத்திய அரசின் மிக முக்கிய நிறுவனங்கள் காணப்படுகின்றன.

எனவே, இந்தியத் தரப்பிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை, ராணுவ தளவாடங்களை எளிதாகக் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டுவருகிறது.

எனினும், இந்திய கடற்படை சார்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே இலங்கையில் சீனா கால்பதித்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி, தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், துறைமுகம் வந்த நீர்மூழ்கிக் கப்பல் என பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாகவே இது பார்க்கப்படுகிறது என்றும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.