பாராட்ட பெரியமனது வேண்டும்!

கொரோனா வைரஸ் பிடியிலிருந்து காக்க வேண்டிய பல அரசுகள் உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மகா அசாத்தியமானவை

கட்சியைத் தாண்டி, அரசியலைத் தாண்டி அரசின் தலைவர் கோட்டாபாய ராஜபக்சவும்,பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

’கொரோனா அற்ற இலங்கை மலரும்’

கொரோனா அற்ற தேசமாக, இலங்கை வெகுவிரைவில் மலரும் எனும் பூரண நம்பிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின், கொரோனா வைரஸ் தடுப்ப நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதாக, அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்குகின்ற அனைத்து கட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் நாட்டை காக்கும் இளைஞர் அணியின் பிரதி தலைவருமான முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.

நீர்வை பொன்னையன் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டார்

(Fauzer Mahroof)

இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, அவர் தம் துயரங்களை எழுதியும், அவர்களுக்காக குரல் கொடுத்தும் வந்த மூத்த தோழர், நீர்வை பொன்னையன் தனது 90வது வயதில் மறைந்த விட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்

(பதிவுகள்.காம்)

  • செல்லத்துரை சுதர்சன் –
  • நல்ல கவிதை. கியூபாவின் மானுட நேயத்தைச் சரியான நேரத்திலுணர்ந்து எழுதிய கவிதை. உலகின் எந்தப்பகுதியிலென்றாலும் இதுபோன்ற பேரழிவுகளின்போது கியூபா தன் மருத்துவர்களையு, மருந்துகளையும் அனுப்பி உதவுவது வழக்கம். ஆனால் இம்முறை மேற்கு நாடுகளிலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகையில், உலகமே பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கையில் இவ்விதமான மானுட நேயச் செயற்பாடுகள், உதவிகள் போற்றப்பட வேண்டியவை. இவ்வழிவிலிருந்து மீண்டபின்னர் மேற்கும் கியூபாவின் பரந்த உள்ளத்தை உணர்ந்து, தடைகளை நீக்குமென எதிர்பார்ப்போம். –

கடவுளும் முதலாளித்துவமும் தோல்வியடைந்துவிட்டன!

(Maniam Shanmugam)

உலகில் சில விடயங்கள் எதிர்பாராமல் நிகழ்வதுண்டு. அப்படி நிகழும்போது அதுவரை காலமும் நாம் கட்டிக்காத்துவந்த சில நம்பிக்கைக் கேகாட்டைகள் தகர்ந்துவிடுவதுண்டு. இந்த கொரனோ வைரஸ் வந்தபின்னர் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு விடயங்கள் சம்பந்தமானது.

இந்தியாவில் இரணடு விதமான வழிகாட்டுதல்கள்!

(Maniam Shanmugam)
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது நாட்டின் 33 கோடி சனத்தெகையையும் கொரனோ வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காது, சீனா மீதான அரசியல் காழ்ப்புணர்வுடன் “சீன கொரனோ” பற்றி பிரச்சாரம் செய்வதில் காலத்தைச் செலவிடுகிறார்.

எப்படி இருக்கிறது ஸ்வீடன்?

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் பிப்ரவரியில் ஒவ்வொரு மாவட்டம், மாகாணத்திலும் ஏதோ ஒரு வாரம் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். அந்த சமயத்தில், பலரும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வது இயல்பு. சுவிட்ஸர்லாந்தை ஒப்பிடுகையில் இத்தாலி மலிவான சுற்றுலாத் தலம் என்பதும், ஆல்பஸ் மலையின் மறுபுறம் வட இத்தாலியில் வருவதும் கணிசமான மக்கள் வட இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் சுற்றுலா செல்லத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்.

மாஸ்கோவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் 1 லட்சம் கேமராக்கள்

மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றினார். மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கு வீடு விற்பனை செய்ய ஏற்பாடு

ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட வேலையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவில் ஒன்றுகூடியிருந்தமை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாகும் என சுகாதார அதிகாரிகள் கணித்திருக்கின்றனர்.