‘‘மன்னிக்க முடியாது’’ – வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.