சசிகலா விரைவில் மக்களைச் சந்திப்பார்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து   இளவரசி விடுதலை ஆனார். இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார். சிறையின் முன்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேலும் அகதிகளை ஏற்கவுள்ள பைடன்

வருடாந்தம் அகதிகளாக ஏற்போரை எதிர்வரும் நிதியாண்டில் 125,000ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த அகதிகள் உள்ளெடுப்பானது எட்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பொன்றாகும். இவ்வாண்டில் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் 15,000 பேரே, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதலான நிதியாண்டில் உள்ளெடுக்கப்படவுள்ளனர்.

இந்திய விவசாயிகள் போராட்டம்

எல்லையில் இருப்பதை போன்ற மோசமான சூழல் தில்லியில் நிலவுகிறது….. விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் தகவல்….

தலவாக்கலை நகரம் முடங்கியது

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு பல தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.

செட்டியார் தெரு வர்த்தகர்கள் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பு, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மலையகத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சு. க பேரணியில் வாள்வெட்டு குழுவினர்; ஒருவர் கைது

யாழில், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில், யாழில், நேற்றைய தினம் (04) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவிற்கு கடனை திருப்பிக் கொடுத்தாயிற்று

இந்தியாவிடமிருந்து நாணய மாற்று முறை அடிப்படையில் கடந்த வருடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

’சிங்கள மக்களுக்கு எதிரான பேரணியல்ல’

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார். திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து, இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணியில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை: 27 அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை விவரம்

27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல் 3 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

முழு மலையகமும் முடங்கியது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.