புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை

சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய பிரதமராக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு இணக்கமான ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி ஊடாக, ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

’தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்’

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்கவேண்டுமென  மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

ஏமாற்றினார் மஹிந்த யாப்பா அபேவர்தன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பதவி விலகுவதாக அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.

ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் தெரிவித்தார்.

மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா

மாலைத்தீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபுதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம்

ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது பிரதமர் அலுவலகத்துக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். 

என்னதான் நடக்கப் போகுது…..? என்னதான் நடக்க வேண்டும்…..?

(சாகரன்)

நாடுகளில் சட்டச் சிக்கல் என்று பதவியில் இருந்து இறக்க முடியாது என்பதற்கு எல்லாம் தீர்ப்பாக அமைவது மக்களின் விடாப்பிடியான போராட்டங்களே. வரலாறு இதனை எழுதித்தான் வந்திருக்கின்றது. இன்று இலங்கையும் அதனை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு : 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு

புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படும். ஜூலை 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியை தடுக்க எம்மால் முடியாது

உத்தியோகபூர்வமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் சட்ட அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு இல்லை என்று, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே. ஏ. ஏ. எஸ். கனுகல தெரிவித்தார்.