வானவில்….

இடதுசாரி இயக்கம் மீண்டும் மீள் எழுச்சி பெற வேண்டும்!

இலங்கை இன்று முன்னொருபோதும் இல்லாத வகையில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

இலங்கை: கொரனா செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்’

வெற்றிடமாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

‘7 பேர் விடுதலையில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது’

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கண்ணை மூடிக் கொண்ட பூனைகள்

(இல அதிரன்)

ஒரு பதவிக்கு வந்துவிட்டால், நான் சொல்வதெல்லாம் சரி; நான் செய்வது மட்டுமே முழுமை; நானே எல்லாமும் என்ற எண்ணம், ஒரு சிலரைத்தவிர ஏனையோருக்கு வந்துவிடுகிறது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் வியாழக்கிழமை (01) கூறிய “மட்டக்களப்பின் ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது, குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது” என்ற கருத்துக்கும் இதற்கும் தொடர்புண்டு. இருந்தாலும் அது தலைகீழானது; இவருடைய இந்தக் கருத்து பெரியளவில் பேசப்படுவதாகவும் மாறியிருக்கிறது.

சீனா கௌவிய கௌதாரி: வளங்களும் நலன்களும் பாதிப்பு

இலங்கையின் வடபுலத்தில், மிகவும் தொன்மையான வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களில் ஒன்றாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது. அதாவது அங்காங்கே தொன்மையான கோவில்கள், கடல் மார்க்க போக்குவரத்துக்கான துறைமுகங்கள், கோட்டைகள் என்பன இதற்குச் சான்றாகும்.

தொடர்ந்து அச்சத்தில் ஏறும் இலங்கை ரூபாய்

பத்து நாட்களுக்குள் இலங்கை அரசாங்கம் வரலாற்றுச் சாதனையாக ரூ. 231.5 பில்லியனை அச்சிட்டுள்ளது. ஏல விற்பனையின் போது திறைசேரி பத்திரங்கள் விற்பனையாகாததன் காரணமாக, அவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தப் பணம் அச்சிடப்பட்டிருந்தது. இவ்வாறு ரூபாய் அச்சிடப்படுவது இந்த ஆண்டில் முதன் முறையாக இடம்பெறவில்லை என்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் கடும் எச்சரிக்கையையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கை கொள்வனவு செய்த முதல் தொகுதி பைஸர் தடுப்பூசி இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட  26,000 பைஸர் தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின் மூலம் அதிகாலை 2.15 அளவில் இலங்கையை வந்தடைந்தன.

ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் திவாலாகும் நாடு

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுக்குடியிருப்பில் ’சௌபாக்கிய உற்பத்தி கிராமம்’

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், வேணாவில், கைவேலி ஆகிய கிராமங்களை இணைத்து, சௌபாக்கிய உற்பத்தி கிராமத்துக்கான ஆரம்ப பணிகள், இன்று (05) முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, தோல்பொருள்கள், பற்றிக் உற்பத்திகள், ஆடை உற்பத்திகளை மேற்கொள்வதற்காக பொதுகட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் நாட்டிவைத்தார்.