பிரஞ்சுகாரன் கூறும்? இவ்வளவும் இருந்தும் ஏன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டார்கள்….?

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்

ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில்,
ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்! விடுதலைப் புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று!
இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!

(“பிரஞ்சுகாரன் கூறும்? இவ்வளவும் இருந்தும் ஏன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டார்கள்….?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினியின் கூர்வாளிற்கு நிலாந்தனின் கருத்துரையும் பதிலுரைகளும்

நிலாந்தன் ஒரு சுயாதீனமான ஆய்வாளர் அல்ல. அவர் ஆங்கிலத்தில் வாசித்து உலக அளவில் சிந்திக்ககூடியவரும் பகுப்பாய்வு செய்யக்கூடிய மதிநுட்பமுடையவரும் ஆனாலும் ஆய்வாளருக்குரிய மிகமுக்கியமான அடிப்படைத்தகுதிகளிலொன்றான ” காய்தல் உவத்தலின்றி எக்கசப்பான சொல்லக்கடினமான உண்மைகளை வெளிப்படுத்தல் என்பதில்” அவர் குறைபாடுடையவராக காணப்படுகிறார்.அதாவது உண்மையைச்சொல்வதைவிட தமிழ் சமூகத்தின் ஒரு சிறுபான்மையான பகுதியொன்று (minority special interest group/ Diaspora Wellalar & associate castes)கேட்கவிரும்புகின்ற உண்மைகளையே எழுதவிரும்புகிறார். அவரது கட்டுரைகளிலிருந்து பல உதாரணங்களை இதற்கு காட்ட முடியும் எனினும் பின்வரும் அவரது அவதானங்களிலிருந்து இவ்விவாதத்தை தொடரலாம்.

(“தமிழினியின் கூர்வாளிற்கு நிலாந்தனின் கருத்துரையும் பதிலுரைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மாற்றங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் ஈ.பி.டி.பியிலிருந்து விலகினேன் – முன்னாள் எம்.பி சந்திரகுமார்-

கடந்த 05.06.2016 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியான நேர்காணல்
கேள்வி – ஈ.பி.டி.பி. ஐ ஆரம்பித்து அதனைப் பதிவு செய்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்படியிருந்தும் கட்சித் தலைமையுடன் உருவாகிய பிரச்சினைகளை உங்களால் ஏன் பேசித் தீர்க்க முடியவில்லை?
பதில் – எமது மக்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப்போராட்டத்தில் 1980 களின் ஆரம்பத்தில் இணைந்ததிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த முப்பது ஆண்டுகளிலும் எமது போராட்டமும் இலங்கை மற்றும் சர்வதேச அரசியற் போக்குகளும் பாரிய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஒரு காலகட்டத்தின் தேவையாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை உருவாக்க வேண்டியிருந்தது.

(“மாற்றங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் ஈ.பி.டி.பியிலிருந்து விலகினேன் – முன்னாள் எம்.பி சந்திரகுமார்-” தொடர்ந்து வாசிக்க…)

ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள்

ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள் .நடந்தபோது முன்னாள் ஒரு தமிழ் இயக்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் தமது தவறை உணர்ந்து அதிலிருந்து விலகி ஏறாவூர் கிராமத்தின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறையுயுடன் செயற்பட்ட வாலிபனான ஜலால்தீன் 12 ம் திகதி அதிகாலையில் தனது இயக்க அணுபவத்தினால் நடப்பதை உணர்ந்துகொன்டு கால்நடையாக காட்டுவழியாக ஓடி களுவங்கேர்னி இரானுவ முகாமுக்கு சென்று அங்கிருந்து இரானுவத்தை அழைத்து வந்தவர். இவர் சில வருடங்களின் பின்னர் அரவம் தீண்டி அகால மரனமடைந்தார். ( எனக்கு நேரில் அறிமுகமான அந்த துடிப்பும் துனிவும் கொன்ட வாலிபன் மறைந்த ஜலால்தீனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணமாகும்)
ஏறாவூர் சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரில் பேராதனை பல்கலைக்கழ்க சிரேஷ்ட விரிவுரையாளரான ஜனப் அமீர்தீன் என்பவரின் குடும்பத்தினரும் அடங்குவர். இதில் முரன் நகை என்னவென்றால் இவரது சகோதரரும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் , ஆனால் இவரது சொந்த குடும்பமும் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
(Bazeer Seyed)

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்.

வருந்துகிறோம் தோழர்களே. வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த விசைப்படகுகள் என்ன தொழிலை மேற்கொண்டன என்ற விபரத்தை நீங்கள் ஏன் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்….? ட்ரோலர்தானே? ட்ரோலராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப் படுவதில் தப்பே இல்லை. அப்படியான நாசகாரத் தொழிலை மேற்கொண்டிருப்பார்களேயானால் அவற்றைப் பறிமுதல் செய்வதே சரியானது. நேற்று முன் தினம் எமது மீனவர்களின் ஆறு படகுகளின் நைலோன் வலைகளை அனலை தீவுக்கு மேற்குக் கடலில் தமிழக ட்ரோலர் படகுகள் அப்படியே அறுத்து நாசம் செய்துள்ளன.

(“தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்.” தொடர்ந்து வாசிக்க…)

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுக்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டது. தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவனாலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன.

(“திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!” தொடர்ந்து வாசிக்க…)

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் நூல் வெளியீட்டு விழா…

சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும், உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடைமைகளில் ஒன்றாக இருந்த நூல் இது. சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பெற்றுக்கொண்டார்.

கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்

நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கனக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மாணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

(“கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்” தொடர்ந்து வாசிக்க…)

புத்தக விமர்சனம்

எல்லாளனின் “ஒரூ தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’
தனது குறுகிய கால (9 மாதங்கள்) இயக்க வாழ்க்கையையும் அக்கால அரசியல் சூழுலையும் நேர்மையான, பக்கசார்பற்ற சுயமீளாய்வுக்குட்படுத்திய ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. தான் சார்ந்த இயக்கத்தையும், ஏனையஇயக்கங்களையும் எவ்விதவேறுபாடுகளுமின்றி நடுநிலை தவறாது விமர்சிப்பது மெச்சத்கது. இப்படியான கண்ணோட்டங்களை இந்நாட்களில் வாசிக்கக்கிடைப்பது அரிது. சமகாலத்தில் வெளியாகும் போராட்டம் தொடர்பான நூல்கள்களில தவறுகளை நியாயப்படுத்தல் பலவவீன்னங்களை மிகைப்படுத்தல் ஒருசிலரை குறிவைத்து தாக்குதல் போன்னறவை அதிகமாகக்காணப்படும். இந்நூல் அதற்கு விதிவிலக்கு.

(“புத்தக விமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் – தென்மராட்சி மக்கள்..!! பேசாத பார்க்காத கேட்காத இரகசியம்!

கனடாவில் – தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! மக்கள் என்ன பேசுகிறார்கள்..? கனடாவிலுள்ள யாழ் – தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் செயற்த்திட்டங்களும் என தெரியவருகிறது.

(“கனடாவில் – தென்மராட்சி மக்கள்..!! பேசாத பார்க்காத கேட்காத இரகசியம்!” தொடர்ந்து வாசிக்க…)