தமிழினியின் கூர்வாளிற்கு நிலாந்தனின் கருத்துரையும் பதிலுரைகளும்

நிலாந்தன் ஒரு சுயாதீனமான ஆய்வாளர் அல்ல. அவர் ஆங்கிலத்தில் வாசித்து உலக அளவில் சிந்திக்ககூடியவரும் பகுப்பாய்வு செய்யக்கூடிய மதிநுட்பமுடையவரும் ஆனாலும் ஆய்வாளருக்குரிய மிகமுக்கியமான அடிப்படைத்தகுதிகளிலொன்றான ” காய்தல் உவத்தலின்றி எக்கசப்பான சொல்லக்கடினமான உண்மைகளை வெளிப்படுத்தல் என்பதில்” அவர் குறைபாடுடையவராக காணப்படுகிறார்.அதாவது உண்மையைச்சொல்வதைவிட தமிழ் சமூகத்தின் ஒரு சிறுபான்மையான பகுதியொன்று (minority special interest group/ Diaspora Wellalar & associate castes)கேட்கவிரும்புகின்ற உண்மைகளையே எழுதவிரும்புகிறார். அவரது கட்டுரைகளிலிருந்து பல உதாரணங்களை இதற்கு காட்ட முடியும் எனினும் பின்வரும் அவரது அவதானங்களிலிருந்து இவ்விவாதத்தை தொடரலாம்.

“ஆறாவது தகுதி – சாதி அல்லது சமூக அடிப்படையிலான தகுதி. முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும் இது ஒரு வீழ்ச்சி. ஒரு சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நியமிக்க வேண்டியிருப்பது என்பது தமிழ்த்தேசியத்தின் கோட்பாட்டு அடிப்படைகளின் மீதும் அதன் உள்ளடக்க போதாமைகளின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது.
38 ஆண்டுகால ஆயுதுப் போராட்டமானது சாதியை முழுமையாகக் கடக்க உதவவில்லையா என்றும் கேட்கத் தோன்றுகின்றது. இம்முறை தமிழ்த்தேசியக் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிந்தபோது சில தெரிவுகளில் சாதிக்கும் ஒரு பங்கு இருந்தாகக் கூறப்படுகின்றது. அதாவது கொள்கையை முன்வைத்து வாக்குக் கேட்க முடியாத ஒரிடத்தில் சாதி அடையாளத்தை முன்வைத்து வாக்குக் கேட்கவேண்டிய ஒரு வங்குரோத்து நிலை. இது ஆறாவது.”

நிலாந்தன் இங்கு சொல்லவிரும்பாத மறைக்கின்ற விடயங்கள் என்னவென்றால் அமிர்தலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘தமிழ் தேசியமே’ ஒரு குறிப்பிட்ட பகுதியாரான யாழ் குடாநாட்டு சைவவேளாளர்களால் தொடக்கப்பட்ட ஒரு சித்தாந்தமாகும்.அதாவது தமிழ்தேசியமே வருணாச்சிரமக்கோட்பாடு போல சாதி அடக்குமுறையை அடிப்படையைக்கொண்டு கட்டப்பட்டதாகும். புலிகளும் அமிர்தலிங்கத்தினால் வரையப்பட்ட அதே திட்டத்தைக்கொண்டே மிகநச்சு வீரியத்தோடு முன்னெடுத்தார்கள்.

இத்தேசிய கொள்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குடாநாட்டு சைவவேளாளரும் கோவியர் போன்ற இடைநிலைச்சாதிகளும் மேலோங்கிக்கரையாரும் அல்லாத தலித்துக்களும் மீன்பிடிக்கரையாரும் ஆவர்.இவர்கள்தான் தங்கள் சமுகத்தில் தங்கள் விகிதாசாரத்தைவிட அதிகமாக பிரபாகரனிய போர்களில் இறந்தவர்கள். வெள்ளாளரும் அவரை அண்டிய இடைநிலைச்சாதியரும் இயக்கத்தில் இணைந்தாலும் பின்னர் இயக்கத்தைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியதாக இருந்தது. அல்லது இயக்கத்தில் சேராமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வசதி உடையோராகவும் அல்லது பல்கலைக்கழகத்துக்கு சென்றோ அல்லது கணக்கியல் தகவல் தொழில்நுட்பம்(IT)படித்தோ புலிகளில் சேராமல் தங்களை உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.

புலிகள் கட்டளைப்படி TNA வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்ட முன்னைய தேர்தல்களிலும் சாதி அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். பிரபாகரனும் தன் சாதி அபிமானத்தோடேயே புலிகளின் நியமனங்களை செய்தார்.
1. கே.பி திலகர் கிட்டு காஸ்றோ என புலிகளின் அனைத்து சர்வதேச
பொறுப்பாளர்கள் கரையார்கள்.
2. சீனியரான வெள்ளாள பொன்னம்மானை புறக்கணித்து ஜூனியரான கரையார கிட்டு யாழ் தளபதியாக
நியமிக்கப்பட்டது.
3. கடைசிகாலத்தில் புலிதேவனுக்கு கிடைக்கவேண்டிய தமிழ்செல்வனின் பதவி பொலிஸ் நடேசனுக்கு வழங்கப்பட்டது.


“புலிகளின் வரலாற்றை யாருமே எழுதமுடியாது.
அது ஒரு புதிராகவே இருக்கப்போகிறது”  என்ற நிலாந்தனின் குரல் ஒரு விஞ்ஞான மறுப்புவாதியினுடையது. நிலாந்தனின் குரல் ஒரு தமிழ்தேசியவாத மந்திரவாதி/சோதிரருடையது. நிலாந்தன் என்கிற போலி சமூக விஞ்ஞானியின்  சைக்கோலோஜிக்கல் புறோபைல் எழுதவேண்டிய தருணமிது. நிலாந்தன் என்கிற தன்மோகி(Narcissist) தன் தனிப்பட்ட நலன்களுக்காக, தன் நோர்வே பயணங்களுக்காக தன் பிரபல்யத்துக்காக போடும் மலின பத்திரிகையாளர் Shock Jock/Tabloid வேடங்கள்  கலையப்படவேண்டிய தருணமிது. பிரபாகரனை
மகத்தான மண்டேலா, காஸ்றோ போன்றோருடன் ஒப்பிடுவது அவரின்  நோய் முற்றிய குணங்குறி. தமிழினி அக்கா நீ வாழி. இறப்புக்குப்பின் தான் அக்கா உன் அரசியல் வாழ்வும் பங்களிப்புமே தொடங்குது. சாகா வரம்பெற்ற இன, குல( thanks Seeman) தெய்வம் நீ
சிவகாமி!

(Arun Ambalavanar)

விடுதலைப்புலிகளின் வரலாற்றை யாருமே முழுமையாக எழுத முடியாது என்ற ஆய்வாளர் நிலாந்தனின் கூற்று ஆச்சரியத்தையே தருகின்றது. விடுதலைப்புலிகளின் வரலாற்றைப்பற்றிய தொண்ணூறு வீதமான விடயங்கள் அவர்களின் பிரசுரங்கள், காணொளிகள், ஏனைய அமைப்புகளின் , தனி நபர்களின் கட்டுரைகள், நூல்கள் (தமிழினியின் நூல் உட்பட) ஆகியவற்றை உசாத்துணை நூல்களாகக் கொண்டு, அவற்றை விமர்சன நோக்கில் ஆராய்வதன் மூலம், எழுத முடியும். விடுதலைப்புலிகளின் வரலாற்றில் விடுதலைப்புலிகளின் தலைவரின் முடிவுதான் சில ஊகங்களுக்குள்ளாக அமையும். இறுதிக்கணங்களின் என்ன நடந்தது என்பது பற்றி (சரணடைந்த பின் கொல்லப்பட்டாரா அல்லது சண்டையில் கொல்லப்பட்டாரா) , ஏதாவது காணொளி வெளிவரும் வரும் வரையில் அது பற்றிய சர்ச்சைகளும் ஓய்ந்து விடப்போவதில்லை. என்னைப்பொறுத்தவரையில் அது பற்றிய முடிவும் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தர்க்கரீதியாகச்சிந்திப்பதன் மூலம் ஊகிக்கப்பட முடியும். விடுதலைப்புலிகளின் தலைவரின் வரலாறு தான் இவ்விதமான ஊகங்களுக்குரியது. ஆனால் விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பின் வரலாற்றில் இவ்விதமான குழப்பங்கள் எதுவும் கிடையாது. ஆரம்பத்திலிருந்து ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுவரை கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மிக விரிவாகவே, தெளிவாகவே அமைப்பின் வரலாற்றை எழுத முடியும்.

(Giritharan Navaratna)

விடுதலைப் புலிகளின் வரலாறு என்பது தலைவரின் வரலாறு மட்டுமே ஆகுமாம். அதை தன்னைத் தவிர வேற ஆராலுமே எழுதமுடியாதாம். ஆனாலும் அதை தான் எழுதவே மாட்டன் எண்டு நாசூக்காக சொல்லுறாராம்.வைக்கோல் பட்டறை நாயைப்போல தானும் சொல்லாமல் , மற்றவர்களையும் சொல்லவிடாமல் அரசியல் குலைப்பு தன்னால் மட்டுமே செய்யமுடிமும் என்கிறார்ஆய்வாளர். இந்த சின்னப்பெட்டையல், பெட்டியங்களுக்கு என்ன தெரியுமேண்டு எழுதினம் என்று கேட்கிறார் ஆய்வாளர் . புலிகளின் பாசிச வரலாற்றை எழுதுபவர்களெல்லாம் “சுயசரிதம்” எழுதுகிறார்கள் என்று குறுக்கி ,தலிவரையும் காப்பற்றி தன்னையும் காப்பற்றும் நவீன பாசிஸ்டுகளாக இவர்களைப் போன்றவர்கள் சுற்றி சுற்றி வலம் வந்து கோண்டே இருருகின்றனர்.தான் காவல் காக்கும் வைக்கோல் பட்டறைக்குள் இருந்து தலைவர் ஒருநாள் எழுப்பி வருவார். புலிகளின் கதையை எழுதுவார் என்று புலுடா விடுகிறார் ஆய்வாளர்.எங்கேயாவது முருக்கங்காய் புடலங்காய் ஆயுற வேலை இருந்தா சொல்லுங்கோ அண்ணனுக்கு சிபார்சு பண்ணலாம் !

(Sutharsan Saravanamuthu)
புலிகளின் வரலாற்றை செட்டி(கல்வியங்காடு) கண்ணாடிப் பத்தன்(அனுராதபுரம் காட்டிற்குள் சிறையிலிருந்து தப்பி வரும் போது நடைபெற்றது) கொலை காலகட்டத்திலிருந்து உண்மையாக எழுத வேண்டும். அதாவது ரிஎன்ரி கால கட்டத்திலிருந்து எழுத வேண்டும். இதுவரையும் இவர்கள் பற்றி எழுதிய இவர்களுக்குள் இருந்து வந்தவர்கள் பெரும்பாலும் உண்மைகளை மறைத்தே எழுதியிருக்கின்றனர். புலிகளின் ஏகபோக செயற்பாட்டையும் ஜனநாயக மறுப்பு செயற்பாட்டையும் மாற்றுக் கருத்தாளர்களின் குரல் வளையை நெரித்தது கொலை செய்தது இறுதிவரையும் புலிகளால் நடாத்தபட்ட சித்திரைவதை முகாங்கள் பற்றியும் எழுதவில்லை. குறிப்பாக துணுக்காய் வதை முகாம் பற்றியும் இவர்களால் கொலை செய்யப்பட்ட மாற்றுக் கருத்தாளர்கள். பொது மக்கள் பற்றிய விடயங்களை தமிழினி உட்பட யாரும் குறிப்பிடவில்லை. புலிகளுக்கள் நிலவிய உள் இயக்க படுகொலைகள் பற்றியாவது குறைந்த பட்சம் குறிப்பிடவில்லை. இவற்றை இவர்கள் திட்டமிட்டு தவிர்த்தே எழுதியுள்ளனர். ஏன் எனில் இக்கொலைகளை இவர்களும் இணைந்தே செய்தனர். இது சாத்திரிக்கும் பொருந்தும். ஐயருக்கும் பொருந்தும். புலிகளின் முழுவரலாற்றை உண்மையாக எழுதினால் உலக வரலாற்றில் கிட்லர் முசோலினி பொட்பொட் வரிசையில் பிரபாகரனும் அவர்களுடன் இருந்த பலரும் இணைக்கப்படுவர். தனிப்பட்ட முறையிலும் இயக்க ரீதியிலும்

(Siva Easwaramoorthy)