வடக்கு மக்களுக்கு நீர்

யாழ்ப்பாணத்தின் எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள், உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் கீழ் நீரைப் பெற்றுக்கொள்ளளுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐயகுணரத்ன, இன்று ஆரம்பித்து வைத்தார். எழுவைத் தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில், கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே, இந்த நன்னீராக்கும் திட்டம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு நன்னீராக்கும் திட்டங்களும், 7.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்’

“அவசரச் சட்டம் கொண்டு வந்து நானே சல்லிக்கட்டை துவங்கி வைப்பேன்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல், அவசரச் சட்டம் கொண்டுவந்து, தற்காலிகமாக சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கே அழுத்தத்தை கொடுத்திருந்தார்கள்.

(“சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்’” தொடர்ந்து வாசிக்க…)

நேற்று முழுவதும் மெரீனாவில்…

நேற்று பகலிலும் இரவு 10 மணிக்குப் பின்னரும் இருமுறை மெரீனா சென்று சில மணி நேரம் அங்கு குழுமியிருந்த மக்கள் திரளில் கலந்தேன். உரைவீச்சுகள் நடக்கும் பக்கமாகப் போகாமல் ஆங்காங்கு திரண்டு நின்று இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டும், பறை முழக்கிக் கொண்டும், மோடியை ஏசிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும், தண்ணீர் பாக்கெட்களை வீசிக் கொண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும்… நின்றிருந்த மக்கள் திரளிடையே கலந்து திரிந்தேன்.

(“நேற்று முழுவதும் மெரீனாவில்…” தொடர்ந்து வாசிக்க…)

உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை

சத்தஞ் சந்தடியில்லாமல் கனடிய அரசு செய்த காரியம் – உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு சட்டவிரோதமாகப் பணச்சேர்ப்பில் ஈடுபட்ட காரணத்திற்கான தடைசெய்யப்பட்ட கனடாவில் இயங்கும் உலகத்தமிழர் அமைப்பானது, 2009ம் ஆண்டில் ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்வதோடல்லாமல், கண்சவேட்டிவ் கட்சி தோற்றபிறகு பதவியேற்ற ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான அரசும் அத்தகைய பாணியையே கடைப்பிடித்து வருகின்றது.

(“உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டு அனுமதி…

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
50 கேள்விகள்…

முதலில் இத்தனை இலட்சம் பேர் ஒன்றாக கூடியதற்காக, இளைஞர்கள், இளைஞிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அரசும் காவல்துறையும் அனுமதித்தது என்றாலும் மிக பொறுமையாக நிதானமாக நேர்மையாக கொட்டும்பனியிலும் தங்கள் கொள்கைக்காக காத்திருந்த நீங்கள் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஒளிமயமான எதிர்காலத்தின் ஒளியாக மாறி இருக்கிறீர்கள்… குழந்தைகளும் பெண்களும் குடும்பங்களும் என ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்களை ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இந்த மாணவர்கள், இந்த மாணவிகள், இந்த இளைய சமுதாயம் நம் தமிழகத்தை வளமான திசைக்கு மாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள். நானும் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு தமிழன் தான்.

(“ஜல்லிக்கட்டு அனுமதி…” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்

(கே.சஞ்சயன்)

அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.  ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன.  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை நினைவுபடுத்துகின்ற அளவுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் மாறத் தொடங்கியிருக்கின்றன.

(“மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த ராஜபக்ஷ பேச்சில் இணக்கம் இல்லை

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஆறு மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கும் இடையில், நேற்று (22) இடம்பெற்ற பேச்சுவார்த்தை, எவ்விதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு இல்லத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. வடமாகாண மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர்கள் இருவருக்கும் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதேவேளை, இந்த சந்திப்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷால் ஜயரத்ன பங்கேற்கவில்லை.

(“மஹிந்த ராஜபக்ஷ பேச்சில் இணக்கம் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை

ஐஸ்வரியா ராய் ஐ உலக அழகி ஆக்கி அதனைத் தொடர்ந்து நான்கு வரையிலான அழகிகளை உலகதரம் என்று காட்டி இன்று இந்தியாவின் மூலை முடுக்கொல்லாம் கக்கூசு இருக்குதோ இல்லையோ அழகு நிலையங்களை திறக்க வழிசமைத்து தமது அழகு சாதனபப் பொருள்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் உருவாக்கிய காப்ரேட் கம்பனிகளின் சுரண்டல் அரசியல் இந்த ‘உலக அழகியல்’ இற்குள் இருக்கின்றது.

(“‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

வினை தீர்க்கான் வேலவன்!

ஈழத் தமிழர்கள் ‘நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்’ என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப் பேசும் போது குழப்பமாகத் தான் இருக்கும்.

(“வினை தீர்க்கான் வேலவன்!” தொடர்ந்து வாசிக்க…)

இனி நீங்கள் மாணவர்கள் அல்ல.. ஆசான்: கமல் புகழாரம்

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, இளைஞர்களின் போராட்டத்தில் பங்கெடுத்து நடிகர்கள் ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார் கமல். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியிருப்பது, “சபாஷ்! தமிழக மக்களே. இந்தப் போராட்டம் அதிருப்தியின் வெளிப்பாடு. இனி காயங்களுக்கு தேவை கட்டு அல்ல அதை நிரந்தரமாக குணமாக்க வேண்டும்.

(“இனி நீங்கள் மாணவர்கள் அல்ல.. ஆசான்: கமல் புகழாரம்” தொடர்ந்து வாசிக்க…)