விவசாயிகளின் மட்டு. பேரணியால் பதற்றம்

மட்டக்களப்பில் நகருக்குள் பேரணியாக நுழைந்த விவசாயிகளால் நகரத்தில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் முற்றுகையிடப்பட்டது.

மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 23 பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

ரூ.10,000 சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக் கோரி, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஊழியர்களால், திணைக்களத்துக்கு முன்பாக இன்று (08) பிற்பகல்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரூ.160 கோடி இழப்பீடு கோருகிறது சீன நிறுவனம்

‘அலட்சிய நடத்தை’ காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் இழப்பு ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.160 கோடி) வழங்குமாறு கோரி, சீனாவின் சேதன உர உற்பத்தியாளரான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குறூப் கம்பனியானது, தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.   

இலங்கை: கொரனா செய்திகள்

தொடர்ந்தும் கூடுகிறது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 512 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 545,768 ஆக அதிகரித்துள்ளது.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 16)

(அ. வரதராஜா பெருமாள்)

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் றப்பர் தோட்டங்கள் எவ்வகையில் பொருத்தமற்றவைகளாக மற்றும் எந்த வரையறைக்குள் பொருத்தப்பாடாக உள்ளன என்பதையும் மாற்று அணுகுமுறைகளின் அவசியம் பற்றியும் இக்கட்டுரைத் தொடரின் கடந்த பகுதியில் அவதானித்தோம். இந்த பகுதியில் உள்நாட்டு உணவுப் பண்டங்களின் உற்பத்திகளின் நிலைமை தொடர்பான விடயங்களை அவதானிக்கலாம்.  

சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் விளைவும்

செம்படை தனது பாதையில் சந்திக்கும் தடை கற்களால் பின்னடைவை சந்திக்கலாம், ஆனால் தடைகளை அகற்றி தொடர்ந்து வீரநடை போடும். இறுதி வெற்றி செங்கொடி ஏந்தி வரும் சோவியத்தின் செம்படைக்கே!சிந்திக்கச் சந்திப்போம், தலை நகர் சென்னையில்.செந்தீ சிந்தனைகள் நவம்பர் குளிரைக் கருக்கட்டும். புரட்சி தின வரலாறு விரி வான புறப்பாடாய் இருக்கட்டும். அரங்கத்தின் கருத்துக்களால் சிவப்பெண்ணம் சிறைமீறி திறக்கட்டும்.உங்கள் பங்களிப்பால் விதை வைக்கும் நல் நிகழ்வு மென்மேலும் சிறக்கட்டும்.சென்னையில் கூடுவோம், சிந்திப்போம், செயலாற்றுவோம்!தோழமையுடன் வரவேற்கும்,

S. Bhaskaran (UCPI)

ஓர் உண்மை நிகழ்வு!

கே.கருணாகரன் கேரள முதல்வராக இருந்த காலம்.

அவரது சொந்த மாவட்டமான திருச்சூரில் ஓர் ஐஏஎஸ் அதிகாரியை ஆட்சியராக நியமித்தார்.

முதன் முதலில் கலெக்டராக பொறுப்பு ஏற்கப்போகும் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைகிறார்.

இறுதி மூச்சுவரை போராடுவோம்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.